முன்தினம் மாலை தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. நேற்று காலை அது மேலும் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. இதில் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #🌦️10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு #தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! #📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢


