👉 வாழு பிறரையும் வாழவிடு 👈
சிந்தனை மட்டுமே
வாழ்க்கை இல்லை
சிந்தித்து வாழ்வதும்
வாழ்க்கை தான்...!!
சரி செய்வது மட்டுமே
வாழ்க்கை இல்லை
சரியாய் நடப்பதும்
வாழ்க்கை தான்...!!
கொடுப்பது மட்டுமே
வாழ்க்கை இல்லை
விட்டுக் கொடுப்பதும்
வாழ்க்கை தான்...!!
பொருளில்லா
வாழ்க்கை இல்லை
பொருளற்ற
வாழ்க்கையும் இல்லை...!!
மனம் போல வாழு
மாசற்று வாழு
மானங்காத்து வாழு
மரியாதையுடன் வாழு
மனிதராய் வாழு...!!
ஒவ்வொரு காயமும் மனம் பழகி போகிறதே தவிர
எந்த காயமும் மனதில் ஆறுவதே இல்லை...!!
இங்கே உயிருக்கே மதிப்பு இல்லாத போது
உணர்வுகளுக்கு எங்கே மதிப்பு
கிடைக்க போகிறது...!!
ஆகவே
விருப்பங்களை
கருத்தில் வை
வெறுப்புகளை
நெருப்பில் வை...!!
சறுக்கி விழுந்தாலும்
நொறுங்கி போகாதே
சட்டென தவழ்ந்தெழு...!!
மனநிறை மகிழ்வோடு
நிறைமன நிம்மதியோடு
என்றும் நடைப்போடு...!!
துன்பங்கள் எல்லாம்
இந்த நொடியை போலவே
இயல்பாய் கடக்கட்டும்...!!
உன்னை ஒருவர் அலட்சியப் படுத்திகிறார் என்று எண்ணி
மனம் வருந்தினால்
நீ வெத்து
அலட்சியப் படுத்தியவர்களை அப்புறப்படுத்தி விட்டு
நின்றால்
நீ செம கெத்து...!!
நாம் ஒரு பிரச்சினையைத்
தீர்ப்பதில் பிஸியாக இருக்கும்
அதே நேரம்..!!
கடவுள் நமக்கான அடுத்த
பிரச்சினையை உருவாக்குவதில்
பிஸியாக இருக்கிறார்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்