ஒரு புதிய அரசியல் கட்சிக்கு இவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேடு ஆரம்பத்திலேயே நிகழ்ந்திருப்பது, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது. பொதுவாக, இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தலைவரின் மீது மக்களின் கோபமும் விமர்சனமும் திரும்பும். ஆனால், கரூரில் நடந்த துயர சம்பவத்தில், 41 பேர் பலியான கோபம் விஜய் மீது திரும்பாதது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
பொதுவெளியில், மக்களில் ஒருவர் கூட விஜய்யை குறை சொல்லவில்லை; மாறாக, தங்கள் தலைவருக்கு ஆதரவாகவே திரண்டு நிற்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? சமூக வலைத்தளங்களில் காசுக்கு மாரடிக்கும் கூட்டம்’ மட்டுமே புலம்புகிறது என்றும், இதுதான் மக்களின் சக்தி என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, ஒரு அரசியல் தலைவரின் பொதுக்கூட்டத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டால், மக்கள் அந்த தலைவரின் மீது கடும் விமர்சனங்களை வைப்பார்கள். நீயெல்லாம் எதுக்கு அரசியலுக்கு வருகிறாய் என்று நேரடியாக விமர்சனம் வைப்பார்கள். ஆனால், கரூரில் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது.
விபத்து நடந்ததால் பெரும் சோகத்திற்கு உள்ளான விஜய், பலியானவர்களுக்கு ரூ.20 அளிக்கவிருப்பதாக வாக்குறுதி அளித்தார். விரைவில் கரூருக்கு நேரடியாக சென்று அந்த பணத்தை கொடுக்க தான் போகிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் இந்த சோக நிகழ்வால் அவர் எந்த அளவுக்கு மனவேதனை அடைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
இந்த கூட்ட நெரிசல் விபத்துக்கு என்ன காரணம் என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும். இந்த விபத்துக்கு விஜய் காரணமில்லை என கரூர் மக்கள் நம்புவதுபோல் விசாரணையின் முடிவில் அனைவரும் அறிந்து கொள்வார்கள் என்று தவெகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், களத்தில் மக்கள் மத்தியில் இந்த விமர்சனங்கள் எதிரொலிக்கவில்லை என்று த.வெ.க. ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விஜய்யை ஒரு மாற்று சக்தியாகப் பார்க்கும் நிலையில், விஜய் மீதும், அவரது கட்சியினர் மீதும் பழி சொல்ல விரும்பவில்லை. இவ்வளவு பெரிய சோதனை காலத்திலும் மக்கள் விஜய் மீது தங்கள் ஆதரவை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், அதுவே மக்களின் உண்மையான சக்தியையும், மாற்றத்திற்கான தேடலையும் காட்டுகிறது. மக்கள் தங்கள் கருத்தை தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்; அதுவரை மௌனம் காப்பார்கள்.
இந்தச் சோதனைகள் அனைத்தையும் தாண்டி, “உண்மை ஒருநாள் வெல்லும், இந்த உலகம் உன் பேர் சொல்லும்” என்ற பாடல் வரிகளை போலவே, இந்த நெருக்கடிகள் விஜய்யின் அரசியல் வாழ்வை இன்னும் வலுப்படுத்தவே வாய்ப்புள்ளது.
இத்தகைய சோதனைகள் தான் விஜய்யை ஒரு சிறந்த அரசியல் தலைவராக மாற்றும். நிர்வாக தவறுகளை களையவும், தொண்டர்களை கட்டுக்கோப்புடன் நடத்தவும், அரசியல் எதிர்ப்புகளை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் இது அவருக்கு ஒரு பெரிய பாடம். ஒரு புதிய தலைவர், தனது தொண்டர்களின் வலிமையுடன் இந்த கஷ்டமான காலகட்டத்தை கடந்து வந்தால், மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.
ஆகவே, கரூர் சம்பவத்தின் துயரம் மறக்கப்பட முடியாதது என்றாலும், அதற்கு பிந்தைய மக்களின் பிரதிபலிப்பு, விஜய் மீது அவர்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையையும், ஒரு நல்ல தலைமைக்கான எதிர்பார்ப்பையும் தெளிவாக உணர்த்துகிறது. இதுதான் உண்மையான மக்களின் சக்தி #🔴இன்றைய முக்கிய செய்திகள் #கரூர் சம்பவம் 😰 #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ #தவெக(TVK)