ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.11.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== திரேதா யுகம் தொடர்ச்சி =========================== மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன் ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது தம்பி யெனப்பிறந்து சத்துருப்போல் தான்சமைந்து என்பெலங்க ளெல்லாம் எடுத்துரைத்தா னுன்றனுக்கு ஆனதா லென்னுயிரு அடையாளம் பார்த்துலக்காய் ஊனமுற எய்தாய் உயிரழிந்தே னல்லாது நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது பேயா நீபோடா புலம்பாதே யென்னிடத்தில் . விளக்கம் ========== இராமபிரானின் உரைகளை இகழ்ச்சியுரையாக உணர்ந்த இராவணனோ, இராமபிரானை சினத்தோடு சீறுகிறான். இராமா, ஏண்டா உண்மைக்குப் புறம்பாக உளறுகிறாய். என்னை நீ கொன்றாயா? அது எப்படியடா உன்னால் முடியும். என்னுடன் பிறந்த தம்பி விபீஷணன் எனக்கு எமனாக உருவெடுத்து, என்னுடைய உற்ற பலம் அத்தனையும் உன்னிடத்தில் உரைத்துவிட்டான். . ஆகவேதான் என்னுடைய இயல்புகளை உற்று நோக்கி இலக்கு வைத்து அம்பை ஈனத்தனமாக எய்துவிட்டாய். எனவேதான் உயிர் இழந்தேன். அல்லாமல் என்னுடைய உயிர் நிலையை உன்னால் ஒரு போதும் அறிய முடியாது. பேயா, நீ போடா இன்னும் இதுபோல் என்னிடம் புலம்பிக் கொண்டிருக்காதே என்றான் இராவணன். . . அகிலம் ======== அப்போது மாயன் அதிகசீற் றத்துடனே ஒப்பொன் றில்லாதார் உரைப்பார்கா ணம்மானை உன்னுட தம்பி யாலே உயிர்நிலை யறிந்து யானும் என்னுட சரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்கா வுன்னைப் பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்புநூ றோடுங் கூடி அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவே னுன்னை நானே . விளக்கம் ========= உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையிலும், உண்மை நிலையை உணர்த்தியும் உணராத அந்த அரக்கனின் அகம்பாவமான பேச்சு, அச்சுதனாகிய இராமபிரானுக்கு அளவில் அடக்காத ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்றாலும், ஒப்பிலடங்காத அந்த உத்தமபிரான், உருக்குலைந்து கிடக்கும் இராவணனைப் பார்த்துச் சொல்லுகிறார். . இராவணா, உன்னுடைய தம்பியாகிய விபீஷணனின் உதவியினால்தான் நான் உன்னுடைய உயிர் நிலையை அறிந்து உன்னைக் கொன்றுவிட்டேன் என்று சொல்லிவிட்டாய். . ஒவ்வொருவருக்கும் வாழ்வு முடியும் வேளையில் ஏற்படும் எண்ணத்திற்கேற்பவே அடுத்த பிறப்பு அமைக்கப்படுகிறது. அதுபோல்தான் உன்னுடைய முன் பிறப்புகளும் அமைக்கப்பட்டன. . எனவே, அடுத்து வரபோகும் துவாபர யுகத்தில் இந்த ஒரு தம்பிக்குப் பதில் 99 தம்பிகளோடும் உன்னையும் பிறவி செய்வோம் என்றார். . . அகிலம் ======== என்னொரு தம்பி யாலே என்னையுங் கொன்றா யென்று தன்னொரு மதத்தால் நீயும் சாற்றிய அரக்கா வுன்னைப் பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வே னுன்னை . விளக்கம் ========= என்னுடைய தம்பிகளில் ஒருவனான விபீஷணனின் உதவியோடுதான் என்னை நீ கொல்ல முடிந்தது என்று என்னிடம் ஆணவத்தோடு கூறுகின்ற அரக்கனாகிய இராவணா ! உன்னை அடுத்து வர இருக்கும் துவாபர யுகத்தில் 99 தம்பிகளுடனும், ஒரு தங்கையுடனும் பிறவி செய்து, இன்னொருவரின் கையினால் உன்னை நான் சாகடிக்கிறேன் . . அகிலம் ======= என்னுடைய தம்பி யாலேதா னென்னுயிரை உன்னுடைய அம்பால் உயிரழிந்தே னல்லாது என்னைநீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய் உன்னை நானிப்போ ஒருபிறவி செய்யுகிறேன் என்றுசொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன் அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்துத் துவாபர யுகம்வகுத்துத் துரியோதன னெனவே கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார் . விளக்கம் ========= தன்னுடைய தம்பியை ஆதாரமாக வைத்துக் கொண்டு தான், தன்னைக் கொல்ல முடிந்தது என்று வீராப்புப் பேசிய இராவணன் மீது எல்லையில்லாக் கோபம்கொண்ட இராமபிரான், அந்த திருதாயுகம் நிறைவு பெற்றதும் சிவபெருமான் வீற்றிருக்கும் கைலேங்கிரிக்குச் சென்று, குறோணியை அன்று துண்டித்த ஆறு துண்டுகிளல் இன்னும் மிஞ்சியிருக்கம் இரண்டு துண்டுகிளல் ஒன்றை எடுத்து நூறு கூறுகளாக்கி, துரியோதனனையும் அவனுடன் நூறு சகோதரர்களையும், தோன்றவிருக்கும் துவாபர யுகத்தில் பிறவி செய்ய வேண்டும் என்று ஈசனிடத்தில் எடுத்துரைத்தார். அந்தக் கோரிக்கையின் படியே அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த திரேதாயுகத்தை நிறைவு செய்தனர். . . தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா சந்தோச மாகுதுகாண் னைச்சார்ந்த அன்போர்க்கு ೭ எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே எதுவந் தாகிடினும் எண்ணம்வையா தேமகனே சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன்  அய்யா 02.11.2020 அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா சந்தோச மாகுதுகாண் னைச்சார்ந்த அன்போர்க்கு ೭ எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே எதுவந் தாகிடினும் எண்ணம்வையா தேமகனே சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன்  அய்யா 02.11.2020 - ShareChat