ShareChat
click to see wallet page
search
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 24 சோமவார சதுர்த்தி: அங்காரக தோஷம் நீங்க ஆனைமுகத்தான் வழிபாடு!* சோமவார சதுர்த்தி என்பது திங்கட் கிழமையும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் ஒரு விசேஷ தினமாகும். விநாயகர் வரும் நவம்பர் 24-ம்தேதி, திங்கட்கிழமை, விநாயகருக்கு உகந்த சோமவார சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியங்களை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் ஆனைமுகத்தோனை வழிபட்ட பின்னரே தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நமது கஷ்ட நஷ்டங்களைப் போக்கி அருள்வார் ஆனைமுகத்தான். சங்கடங்களை மட்டும் அல்லாமல் நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கும் தடைகளை நீக்கி வெற்றிகளை தரக்கூடிய தெய்வமாகவும் விநாயகர் பெருமான் திகழ்கிறார். வரும் திங்கட்கிழமையில் மறக்காமல் விரதம் இருந்து விநாயகரை வழிபடுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் வேழமுகத்தான். மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரை விரதம் இருந்து தரிசிப்பதும் அவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை. சாபத்தால் நோய்வாய்ப்பட்ட சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தார். திருமாந்திரை ஊரில் உள்ள அட்சயநாததை தரிசித்தார். அதன் பலனாக சாபம் நீங்கி சிவபெருமான் தனது சடையில் சந்திரனை சூடிக்கொண்டார். சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டும் நெருப்பு கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணைவதை அங்காரக யோகம் அல்லது அங்காரக தோஷம் என்று கூறுவார்கள். அன்றைய தினம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் மேஷம் மற்றும் விருச்சிகம். அந்த வகையில் வரும் நவம்பர் 24-ம்தேதி வரும் திங்கட்கிழமை சோமவார சதுர்த்தி அன்று அங்காரக தோஷம் ஏற்படுவதால் இந்த இரண்டு ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அன்றைய தினம் (திங்கட் கிழமை) நீங்கள் விரதம் இருந்து விநாயகரை தரித்தால் தோஷத்தின் தாக்கம் குறையும். அன்றைய தினம் மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலையும், வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி, பிரார்த்தனை செய்யுங்கள். சந்திரனுக்கும், விநாயகருக்கும் சாபம் போக்கிய ஸ்தலம் திருமாந்திரையில் இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் உங்களுக்கான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மூட்டு வலிக்கும், கிட்னியில் கல் இருப்பவர்களுக்கும் இந்த கோவிலில் மருந்து தரப்படுகிறது. தேவைப்படுபவர்கள் வாங்கி கொள்ளலாம். எளிமையான கடவுளாக கருதக்கூடிய விநாயகப் பெருமானை எளிமையான முறையில் நாம் முழுமனதோடு வழிபாடு செய்ய அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மிகவும் சாந்நித்தியம் நிறைந்த கார்த்திகை மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில், தூய மனதுடன் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் எல்லா வளமும் தந்தருள்வார் ஆனைமுகத்தான்!🌹
🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 - ShareChat