நாகூர் தர்காவில் நடக்கும் சந்தனம் பூசும் வைபவம் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சந்தனம் பூசும் வைபவத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அதில் இசை புயல் ஏ ஆர் ரகுமானும் கலந்து கொண்டிருக்கிறார். சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏஆர் ரகுமானின் சொந்த பெயர் திலீப்குமார் தான். இவர் ஆரம்ப கட்டத்தில் விளம்பரங்களுக்கு தான் இசை அமைத்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அவரை இயக்குனர் மணிரத்தினம் தன்னுடைய ரோஜா படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ ஆர் ரகுமானுக்கு பல திரைப்படங்களும் கிடைத்தது.
ரோஜா படத்திற்காக ஏ ஆர் ரகுமான் தேசிய விருதும் வாங்கி இருந்தார். அதுபோல ஏ ஆர் ரகுமானுக்கு மகுடம் சூட்டும் விதமாக 2009இல் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதும் வாங்கி இருந்தார். தொடர்ந்து இந்திய திரை உலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஹிட் பாடல்களையும் பின்னணி இசையையும் ரசிகர்களுக்கு ஏ ஆர் ரகுமான் கொடுத்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க ஏ ஆர் ரகுமான் இந்து மதத்தை சார்ந்தவர். அவர் எப்படி முஸ்லிம் மதத்திற்கு மாறினார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அதாவது ஏஆர் ரகுமானின் அப்பாவின் பெயர் சேகர். அவர் ஒரு இசை கலைஞர் ஆக தான் இருந்திருக்கிறார். இந்து மதத்தை சார்ந்த திலீப் குமார் பிறகு ஏ ஆர் ரகுமான் ஆக மாறி இருக்கிறார்.
இது பற்றிய ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில், என்னுடைய அப்பா இறந்த பிறகு நாங்கள் அதிகமாக கஷ்டப்பட்டோம். அந்த நேரத்தில் என்னுடைய அம்மா சூஃபியிஸத்தால் ஈர்க்கப்பட்டாங்க அதற்குப் பிறகு நாங்கள் குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மாறினோம், ஆனாலும் நான் முஸ்லிமாக மாறுவதற்கு பத்து வருஷம் ஆனது. காரணம் இஸ்லாம் மதத்தில் உள்ள சம்பிரதாயங்களை கடைப்பிடித்து ஐந்து நேர தொழுகையை வணங்கி கொள்வதற்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டன.
அதுபோல என்னுடைய பெயருக்கும் சரி, என்னுடைய தம்பி பெயருக்கு முன்னாடியும் ஏ ஆர் என்ற எழுத்து வருவதற்கு என்ன காரணம் என்றால் அது கடவுளின் பெயரை குறிக்கும் சொல் அதைத்தான் நாங்கள் வைத்திருக்கிறோம் என்று ரகுமானின் சகோதரி சொல்லி இருந்தார் #நாகூர் தர்கா கந்தூரி/சந்தனக்கூடு விழா! #🗞️01 டிசம்பர் முக்கிய தகவல்📺 #ஏ ஆர் ரகுமான்


