#magill vithu magill. மகிழ்
மற்றவர்கள் போல நாம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கேள்வி கேட்பவர்கள் வேகமாக இருக்கலாம்.ஆனால் பதில் நம்முடையது.அது உண்மை சார்ந்தது.
கேள்வி என்பது ஆர்வம் மற்றும் சந்தேகத்தைச் சார்ந்தது.பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றால் நிதானம் வேண்டும். கேள்வியின் வேகத்துக்கு பதில் இருந்தால் அது தெளிவான ஒன்றாக இருக்காது.
வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் சிதறிய முத்துக்கள் எனவே கவனமாக இருங்கள்.முட்டாளுக்கும் கோவம் வரும்.ஒரு சிறந்த அறிவாளிக்கு நிதானம் மட்டுமே நிலையாக இருக்கும்.
*🚩பகவத்கீதை🚩*
*ஒரு யோகி என்பவர் பலனை நோக்கி செயல்படுபவர் ஆவார். உலக அறிஞர், தவம் புரிபவர், இவர் எல்லோரையும் விட சிறந்தவன் ஆகிறான். எனவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் யோகி ஆவாயாக! அர்ஜுனா.*
- *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩*
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் சொந்த உணர்திறன், அதன் சொந்த வாழ்க்கை முறை, அதன் சொந்த உணர்வு உள்ளது.
ஆனால் மனிதன், தன்னுடையது மிகவும் உயர்ந்தது என்று கருதி, அதனால் தனது அன்பையும், கண்ணியத்தையும் இழந்து, உணர்ச்சியற்றவராகவும், இரக்கமற்றவராகவும், அழிவுகரமானவராகவும் மாறுகிறார்.
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும்
--------------
#ஶ்ரீமத்பகவத்கீதை 🙏
10. #விபூதி_யோகம்
பாகம்_12
🙏24." பார்த்தா புரோகிதர்களுள் முக்கியமான பிரகஸ்பதி நான் என்று அறிக. சேனைத் தலைவர்களுள் நான் முருகக்கடவுள்; நீர் நிலைகளுள் நான் சமுத்திரம்". 🙏
விளக்கம்: நல் வழியில் நடப்பவர்கள் தேவர்கள். தேவர்களுக்குத் தலைவன் *இந்திரன். இந்திரனுக்கே வழிகாட்டியாகக். குருவாக #பிரகஸ்பதி இருப்பதால், புரோகிதர்களுள் பிரகஸ்பதி முக்கியமானவர். தேவர்களின் குருவான *வியாழ_பகவானாக( பிரகஸ்பதி) இருப்பதும் நானே என்கிறார் பகவான்.
ஈஸ்வர விபூதியை (பரமாத்மாவின் படைப்புக்களை) சிறப்பாக அவ்வாறானவர்களிடம் காண்பது எளிது. ஒரு படையின் வெற்றியானது சேனாதிபதியின் வல்லமையை பொறுத்தே அமைகிறது.. தக்க செயலைச் திறமையுடன், தகுந்த நேரத்தில் செய்தலே வல்லமையாகும்.
சிவபெருமானது புத்திரர்களுள் கணபதி அறிவு சொரூபம்; சுப்பிரமணியர் அல்லது முருகக்கடவுள் *ஆற்றலே வடிவெடுத்தவர். #ஸ்கந்தன் என்ற சொல்லுக்குத் "துள்ளிக் குதிப்பவன்" என்று பொருள். ஞானமும், ஆற்றலும் உடையவரகளே இறைவனை அடைய முடியும். ஆற்றல் வடிவினராகிய ஸ்கந்தன்(#முருகப்பெருமான்) நானே என்று ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைக் கூறுவது முற்றிலும் பொருத்தமானது.
இயற்கையாக அமைந்த நீர் நிலைகளுக்குத் தெய்வத்தன்மை உண்டு. அவைகளில் மிகவும் பெரியது சமுத்திரம். இறைவனின் படைப்புகளில் ஈசுவர மகிமையைக் காண்பவர்கள் கடவுளின் சாந்நித்தியத்தை உணர்கின்றனர்.
எனவே #பார்த்தா! புரோகிதர்களுள் முக்கியமான *பிரகஸ்பதி நான்; சேனைத் தலைவர்களுள் நான் #முருகக்கடவுள்; நீர் நிலைகளில் நான் *சமுத்திரம் என்கிறார்! ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
🙏25. " மகரிஷிகளுள் நான் பிருகு; வாக்குகளில் ஓரெழுத்தாகிய பிரணவம் நான்; யக்ஞங்களுள் ஜப யக்ஞம்; ஸ்தாவரங்களுள் நான் ஹிமாலயம்".🙏
விளக்கம்: பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் தவத்தில் சிறந்தவர் #பிருகுமுனிவர். ஆதலால் அவரிடத்தில் ஈஸ்வர சம்பத்து மிகுந்திருப்பது இயல்பு.
எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகிறது. பிரணவம்(#ஓம்) என்னும் ஓரெழுத்து ஒலியே பிரம்மம். அதில் அனைத்தும் அடங்கப் பெற்றுள்ளது. அந்தப். பிரணவ மந்திரத்தையே "நாத பிரம்மம்" என்கிறோம். அதற்கு ஒப்பான சொல் வேறில்லை. எனவே அது ஈஸ்வர சொரூபம்.
ஓம் என்கிற பிரணவ மந்திரத்தையே தன் பெயராகக் கொண்டவரே ஆதிசக்தி அம்மை உமையவள். #ஓம் என்ற ஓங்கார நாதத்தையே *உமா எனத் தனது பெயராகக் கொண்டாள் அன்னை உமையவள். எனவே *ஓம் என்ற நாதமே மிகவும் மகிமையுடையதாகும்.
ஜீவன் தன்னைப் பரமாத்மாவுக்குக் கொடுத்துவிடுவது எதுவோ, அதுவே வேள்வி(யக்ஞம்). அத்தகைய வேள்விகள் எல்லாவற்றிலும் மிக எளிதில் நாம் செய்யக்கூடியது பகவானின் நாம ஜெபமாகிய வேள்வி.
பகவானின் நாமத்தை எந்நேரமும் துதித்துக் கொண்டிருப்பதே #ஜபயக்ஞம் (ஜப வேள்வி) எனப்படுகிறது. எல்லோரும் எப்பொழுது வேண்டுமானாலும் அதைச் செய்ய முடியும். மற்ற வேள்விகளில் எல்லாம் நன்மை, தீமை இரண்டும் ஓரளவில் கலந்தே இருக்கின்றன.
ஆனால் ஜப வேள்வியிலோ கேடு எதுவும் இல்லை. ஈஸ்வர எண்ணத்தில் ஜீவன் தன்னை இழந்து விடுதல் என்ற நன்மையே அங்கு அமைகிறது. எனவே வேள்விகளில் ஈசன் தானே ஜபவேள்வியாக இருக்கிறான் என்பது மிகவும் பொருத்தமானது.
#ஸ்தாவரம் என்பது நிலத்திணை. பூமியிலிருந்து தோன்றி அவ்விடத்திலேயே உயிரோடு இருப்பது எதுவோ, அதுவே ஸ்தாவரம். மலைகளுக்கும் உயிர் உண்டு என்பது அறிஞர்களின் கொள்கை.
எனவே பூமியில் முளைத்து உயிரோடு இருப்பவைகளுள் மிகப்பெரியது #ஹிமாலயம் என்பது தெளிவு. ஹிமாலயத்தை காண்பது இறைவனையே காண்பதற்கு ஒப்பாகும். மலைகளில் #ஈஸ்வரனின் மகிமையைக் காண விரும்புபவர்கள், ஹிமாலயத்தைக் காண்பர். எனவே "ஸ்தாவரங்களுள் நான் ஹிமாலயம்" என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
🙏26." மரங்கள் எல்லாவற்றினுள் நான் அரசமரம்; தேவரிஷிகளுள் நான் நாரதர்; கந்தர்வர்களுள் சித்திரரதன்; சித்தர்களுள் நான் கபில முனி". 🙏
விளக்கம்: #அரசமரம், அதன் இலை, காய், பூ முதலியன ஒவ்வொன்றும் மனிதர்கள் உண்ண உதவாது என்றாலும், தொன்றுதொட்டு ஆத்ம சாதனங்கள் யாவும் அரச மரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளன. அதைக் காணும் தோறும் வேறு நினைவு எழாது, ஈஸ்வர சிந்தனையே மேலோங்கும். ஆதலால் பகவான் #அரசமரத்தை தனது விசேஷ விபூதி (விசேஷ படைப்பு) என்கிறார்.
#தேவர்கள், மனிதர்களிலும் சிறந்தவர்கள். ஆனால் தேவர்கள் எல்லோரும் ரிஷிகள் ஆகமாட்டார்கள். அவர்களில் தத்துவ தரிசனம் அடைய பெற்றவர்களே #ரிஷிகள். தேவரிஷிகளுள் #நாரதர் மிக முக்கியமானவர். ஏனென்றால் அவர் பக்தர்கள் கூட்டத்தில். சிறந்து விளங்குகிறார். மேலும் அவர் கிளப்பும் கலகங்கள் எல்லாம் இறுதியில் மங்களத்தையே உண்டுபண்ணுகின்றன நாரது கலகங்கள் எல்லாம் நன்மையை தருவனவாகும். எனவே தேவ ரிஷிகள் நான் நாரதர் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
#கந்தர்வர்கள் தேவ கணத்தில் ஒரு பிரிவினர். சோம பானத்தைப் பாதுகாப்பது அவர்களது முக்கிய வேலை. வைத்தியத்திலும், நுண்கலைகளிலும், இசை ஞானத்திலும் மிகுந்த தேர்ச்சி உடையவர்கள் கந்தர்வர்கள். சூதாட்டத்தில் கந்தர்வர்கள் நிபுணர்கள். கந்தர்வர்களின் உதவியை சூதாடுபவர்கள் நாடுகின்றனர். *வேதம் அவர்களால் விளக்கப்பட்டது. ரிஷிகளுக்கு ஆச்சாரியர்களாக அவர்கள் அமைவதுண்டு. கந்தர்வர்களுக்கு அரசன் சித்ரரதன். எனவே பகவான் தன்னை கந்தர்வர்களுள் #சித்ரரதன் என்கிறார்.
பிறவியிலே விசேஷமான தர்மம் ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம் ஆகியவைகளை உடையவர்கள் #சித்தர்கள் எனப்படுகின்றனர்.
மனவுறுதி உடையவர்கள் அல்லது ஜப வேள்வியில் உறுதி பெற்றவர்கள் முனிவர்கள் எனப்படுகின்றனர். ஆறு தர்சனங்களில் ஒன்றாகிய "சாங்கிய தரிசனத்தை" விளக்கியவர் #கபிலர். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். நித்திய சித்தராக இவர். இருப்பதால் பகவான் தன்னைச் "சித்தர்களுள் கபில முனி" என்கிறார்.
மகாபாரதப் போர் முடிந்தது. கிருஷ்ணன் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார். “ஸ்வாமி, தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நானும் காரணமாகிவிட்டேன். பாவம் போக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
இதற்கு பீஷ்மரே சரியானவர் என்று கூறி அவரிடம் அழைத்துச் சென்று, வந்த விவரத்தைச் சொன்னான் கண்ணன்.
பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்…
“ஏன் புது தெய்வத்தைத் தேடி வந்திருக்கிறாய்…? உன் அருகில் நிற்கிறானே கண்ணன்…. அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள்… என்றார்.
"பத்தாவது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கிப் புறப்படுகிறேன். அப்போது துரியோதனன் வந்தான். “ஓய் பாட்டனாரே! உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன், மகா பலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே… உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே..!
நீர் கபடம் செய்கிறீர். எனக்குத் துரோகம் செய்கிறீர். இந்தப் பத்து நாள் யுத்தத்தில் நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாபதி. நாம் தோற்பதற்குக் காரணம் நீர். உமக்கு பாண்டவர்கள் மேல் பரிவு இருக்கிறது.
உம் பிரிய பேரன்மார் பாண்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒன்றும் செய்யாமல் வந்துவிடுகிறீர்… உமக்கு இருப்பது பாண்டவர் மீதான பரிவு’ என்று சொல்லி என்னைத் திட்டினான்.
“அஸ்தினாபுரத்தைக் காப்பேன்’ என்று என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காத்து வரும் எனக்கு இப்படி ஒரு அவச்சொல் கேட்க சகிக்கவில்லை. அவன் சொன்ன வார்த்தைகளைச் சகிக்க மாட்டாமல் அவனிடம் ஒரு சபதம் செய்தேன்."
“இன்றைக்கு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் என்ன நடக்கிறது பார்.. நான் செய்யும் கோர யுத்தம் தாங்காமல், இந்தப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று சபதம் செய்த கிருஷ்ணனையே ஆயுதம் ஏந்தச் செய்கிறேன் பார்’ என்று அவனிடம் சபதம் செய்தேன்.
அப்படியே நான் போர்க்களத்துக்கு வந்த வேகத்தில், துரியோதனன் நாவினால் என்னைச் சுட்ட வடு ஏற்படுத்திய கோபம்… வெறியோடு யுத்தம் செய்தேன். எதிரில் வந்தான் கண்ணன் அர்ஜுனனுடன்.! அவன் மீது அம்பை எய்தேன். அவனை மட்டுமா அடித்தேன். விஷ்ணு பக்தனான நான் கண்ணனுக்கு சந்தனாபிஷேகம் செய்து திருப்பாதங்களைக் கழுவ வேண்டாமா..? அந்தப் போர்க்களத்தில் என்ன செய்தேன்…?
கண்ணன் மீது அம்பு பட்டு அவன் உடலிலிருந்து ஓடும் செங்குருதியால் அவன் பாதங்களை நனைத்து அபிஷேகம் அல்லவா செய்தேன். கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்… ஆனால் நான் அடித்த அடியில் காண்டீபம் நழுவி மூர்ச்சையாகி விழுந்தான் அர்ஜுனன். பார்த்தான் கிருஷ்ணன். கையில் சக்ராயுதபாணியாக தேரிலிருந்து குதித்தான். அப்போது அவன் போட்டிருந்த மேல் வஸ்திரம் நழுவிக் கீழே விழுகிறது. அதைத் தாண்டிக் கொண்டு அவன் வருகிறான்.
நானோ, “அப்பா கிருஷ்ணா… அந்தப் பாவி துரியோதனன் போட்ட உப்பு போகட்டும். எனக்கு உன் சக்கரத்தால் மோட்சம் கிடைக்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டு எதிர்கொண்டேன்.
அப்போது மயக்கம் தெளிந்து எழுந்தான் பார்த்தன். கையில் சக்கரத்தோடு என்னை நோக்கி ஓடி வந்த கண்ணனைக் கண்டான். உடனே கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, “ஹே கிருஷ்ணா இந்தப் போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த நீ உன் சத்தியத்தை மீறலாமா?’ எனக் கேட்டான்.
கண்ணன் சொன்னான்…. “என் சத்தியம் கிடக்கட்டும்… நீ செய்த சத்தியத்தை நான் காக்க வேண்டாமா?
கிருஷ்ணன் பாதத்தில் நான் தஞ்சம்… அவன் என்னைக் காப்பான் என்றாயே… இப்போது இந்தக் கிழவன் உன் கதையை முடித்து விடுவான் போலிருக்கிறதே… நீ செய்த சத்தியத்தைக் காக்க என் சத்தியம் போனால் பரவாயில்லை…’ என்று சொன்னான்.
அவர்கள் இருவர் பேசுவதும் என் காதில் விழுகிறது.
உண்மையில் தர்மா… கிருஷ்ணன் தன் சத்தியத்தை மீறுவதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. அர்ஜுனன் சத்தியத்தைக் காப்பதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. காலையில் துரியோதனனிடம் நான் செய்தேனல்லவா ஒரு சத்தியம்…
இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனையே ஆயுதம் எடுக்க வைக்கவில்லை என்றால் நான் கங்கையின் புத்திரன் இல்லை என்று. என்னுடைய அந்த சத்தியத்தைக் காப்பதற்காக, எனக்காக என் பிரபு ஆயுதம் எடுத்தான்..” என்றார் பீஷ்மர் கண்களில் நீர் தளும்ப…
இதிலிருந்து நாம் கற்பது...
பக்தன், இறைவன் மேல் கொண்ட அதீத பக்தியால் சொல்லும் சொல்லை ஒரு போதும் பொய்யாக்க மாட்டான். அதை செய்து பக்தன் சொல்லும் சத்திய வார்த்தையை காப்பான் என்பதே இதன் சாரம்.
ஓம் நமோ நாராயண
எனவே #அர்ஜுனா! மரங்கள் எல்லாவற்றிலும் நான் *அரசமரம்; தேவரிஷிகளுள் *நாரதர்; கந்தர்வர்களுள் நான் *சித்ரரதன்; சித்தர்களுள் நான் *கபில முனி என்கிறார்!
#ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா.🙏
#


