பழம் பெரும் நடிகர் எஸ் கிட்டப்பா
அவர்களின் 92 வது ஆண்டு நினைவு
நாள் இன்று
இந்த பிறந்தநாளில் இவரை நினைவு கூறுவோம்
எஸ். ஜி. கிட்டப்பா அவர்களை
நினைக்கும் போது கே. பி. சுந்தராம்பாள்
அவர்களை நினைக்க தோன்றும்..
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
1926-ல் இலங்கையிலிருந்து நாடகத்தில் நடிக்க, அழைப்பு வந்த போது அவருக்கு வயது பதினெட்டு.
அங்கேயும் சென்று தன் ஞானக்குரலால் ரசிகர்களை வசியம் செய்யத்தொடங்கினார்.
வள்ளித்திருமணம் நாடகத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ்நாட்டில் இருந்து கிட்டப்பாவும் அழைக்கப்பட்டார். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தனர். ரசிகர்கள் இரட்டை அடைமழையில் நனைந்தனர். ஒருநாள் சுந்தராம்பாளின் குரலால் பித்தேறிய கிட்டப்பா, உணர்ச்சி மேலீட்டில் அவர் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்தார். அங்கே என்ன நடந்தது? சுந்தராம்பாளே பின்னாளில் அது பற்றிச் சொன்னார். ''நான் படுத்து இருந்தேன். 'உன்னைப் பார்க்க ராஜகுமாரன் போல ஒருத்தர் வந்து இருக்கார்’னு அம்மா சொன்னார். நான் எழுந்து உட்காருவதற்குள், அவர் மின்னல்போல வந்து என் அருகே கட்டிலில் உட்கார்ந்துவிட்டார். அவர் பேசினார். நான் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். எனது கந்தர்வன் வந்துவிட்டார் என்று என் மனசு சொல்லியது! என்று அந்த தருணத்தைப் பற்றி சுந்தராம்பாள் வியந்து சொன்னார்.- ஏற்கனவே திருமணமாகி, கிட்டம்மாள் என்கிற மனைவி இருக்கும் நிலையில்... ‘உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்... உனக்கு விருப்பமா?’ என்று நேரடியாக விசயத்துக்கு வந்தார் கிட்டப்பா. ஒரு கணம் தயங்கிய சுந்தராம்பாள் ”என்னைக் கடைசி வரை கைவிடாமல் காப்பாற்றுவீர்களா?’ என்று கேட்டார். கிட்டப்பா உறுதிகொடுத்த பின்னரே, அவருக்கு சம்மதம் சொன்னார் கே.பி.எஸ்.
இவர்களின் திருமணம் 1927-ல் மயிலாடுதுறையில் எளிமையாக நடந்தது. அப்போது கிட்டப்பாவுக்கு வயது 21. சுந்தராம்பாளுக்கோ 19 வயது. ’அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. அது பதிவுத் திருமணமும் அல்ல. அது ஈசனருளால் நடந்த திருமணம். ஜென்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்!’ என்று, தங்கள் திருமணத்தைப் பற்றி பெருமிதமாக சொன்னார் கே.பி.எஸ். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை நீண்டநாள் தொடராமல் போனதுதான் துயரம். கணவருக்காக கதராடை உடுத்தினார். கணவரின் ரசனைக்கு ஏற்பத் தன்னை முழுதாய் மாற்றிக்கொண்டார் சுந்தராம்பாள். தேசபக்தி நாடகங்களில் அவரோடு சேர்ந்து நடித்துப் பாடல்களையும் பாடினார். இடையிடையே குறும்புத்தனத்தால் ஏற்பட்ட ஊடலும் கூடலுமாகக் கொஞ்சநாள் அவர்களின் இல்லறம் சென்றது. இதில் சுந்தராம்பாள் கருவுற்றார். இந்த நிலையில், உள்ளூரில் நடந்த கிருஷ்ணலீலா நாடகத்துக்குப் புறப்பட்டார் கே.பி.எஸ். கிட்டப்பாவோ, ’நான் வரலை. நீயும் போகவேண்டாம்’ என்றார். ஆனால் நாடகத்தின் மீதான ஆர்வத்தில் சுந்தராம்பாள் கிளம்ப, ‘என் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா?’ என்று கே.பி.எஸ்.சிடம் கோபித்துக்கொண்டு முதல் மனைவியிடம் போனார் கிட்டப்பா. கூடவே சஞ்சலம், சந்தேகம் என்று அவர் மனம் பழுதாகி, சுந்தராம்பாளிடமிருந்து கொஞ்சம் விலகி நின்றது.
இந்த நிலையில் அவரது குடிப்பழக்கமும் அதிகமானது. இதில் குடல்வெந்து அவதிப்பட்ட அவர், 1933-ல் சுந்தராம்பாளின் காதலை வெறுத்த நிலையிலேயே மரணம் அடைந்தார்.
கிட்டப்பா மறைந்தாலும் அவர் பாடிய 'எவரனி' என்ற நாடகக் கீர்த்தனையும், 'கோடையிலே இளைப்பாற்றி', 'அன்றொரு நாள்' போன்ற பாடல்களும் என்றும் சாகா வரம் பெற்றவை
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்


