ShareChat
click to see wallet page
search
#வேலூர் #அரசு_மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.... 📌 பிறந்த குழந்தை இறந்ததால் கால்வாயில் வீசப்பட்டதா? உயிரோடு கால்வாயில் வீசப்பட்டதா என்பது உடல் கூராய்வில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது... 📌 இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்... 📌 வேலூர் அரசு பென்ட்லேண்ட் உயர் சிகிச்சை மருத்துவமனை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்த பெண் குழந்தை சடலமாக இருப்பதாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.... 📌 தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயில் இருந்த பெண் பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.... 📌 மேலும் கழிவு நீர் கால்வாயில் பெண் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றது யார் என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.... 📌 #வேலூர் #அரசு மருத்துவமனை #tamilnadu
வேலூர் - ShareChat
00:45