ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.09.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் -------------- நாராயணர் வாழ்த்து ----------------------------- இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே என்றாதி யிருகையால் மாதை யாவிப் புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப் பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ . விளக்கம் -------------- என் துன்பம் எல்லாம் நீங்கி விட்டதென்று கூறிய பெண்மயிலே மானே, என்று கூறி ஆதியாகிய திருமால் இலட்சுமிதேவியைத் தமது இருகைகளாலும் அனைத்து புகழ்ந்து தங்களுக்கு விருப்பமான மணி மேடையினுள் சென்று இடது பக்கத்தில் இருத்தி மீண்டும் புகழ்ந்து அவளை வாழ வாழ்த்தினார். தமக்கு விருப்பமான முறையிலுள்ள சிறந்த நீதியினை வாழ வாழ்த்தினார். வேதங்கள் வாழ வாழ்த்தினார். இறையவரும் மகிழ்ந்து வாழ வாழ்த்தினார். மகிழ்ச்சி பொருந்திய விருப்பமான முறையில் உள்ள இந்நூலின் உபதேச முறைகள் போல வாழும் எல்லா மக்களையும் வாழ வாழ்த்தினார். வானலோகத் தேவர்களும் சிவமும் இப்பெரிய உலக மனிதர்களும் வாழ வாழ்த்தினர். . . அகிலம் -------------- நூல் நிறைவு கூறல் ---------------------------- மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை வையகத்து மனுவோர்க ளறிய மாயன் தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித் தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன் நாதனருள் மறவாத இராம கிருஷ்ண நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச் செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே . விளக்கம் ------------- இலட்சுமிதேவிக்கு நாராயணர் உரைத்தவையே இந்த நூல் ஆகும். இந்த நூலை இவ்வுலக மக்கள் அறியும்படி செய்ய மாயன் வைகுண்ட நாதனாக தேன் நிறைந்த பூக்களையுடைய தாமரையூர் பதிக்குச் சென்றார். அங்குச் சகலச் செழிப்புகளும் தழைத்து இருக்கும் சான்றோர் இனத்தில் தருமத்தையும் இறைவன் அருளையும் சிறிதளவும் மறக்காத இராமகிருஷ்ண பெருமாள் நாடன் வாழ்ந்து வந்தார். அவருள்ளம் மகிழ்வுறும்படி நல்ல உயர்வோடு வந்து பிறந்தவன் ஒழுக்கமுள்ள அரிகோபாலன் ஆவார். அந்த அரிகோபாலன் சீடரின் மனத்தில் புரியும்படி வைகுண்டநாதன் இந்த உரையைதை தொகுத்துக் கூறினார். . . அகிலம் ------------ வாறான கதைவகுத்த நாதன் வாழ வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ வீறான தெய்வசத்தி மடவார் வாழ வீரமுக லட்சமியும் விரைந்து வாழ நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர் நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர் ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம் . விளக்கம் --------------- இப்படி தெளிவான வழியில் கதை வகுத்த வைகுண்டநாதன் வாழட்டும். இதை ஏட்டிலிருந்து எடுத்து எழுதிப் படித்தவரும் அந்தக் குல மக்களும் வாழட்டும். சக்தி பொருந்திய தெய்வக்கன்னியர் வாழட்டும். வீரத் தன்மையான முகம் பொருந்திய இலட்சுமிதேவி மகிழ்ந்து வாழட்டும். நாராயணருடைய அருளால் இந்நூலைப் படித்தவர்களும், கேட்டவரகளும், இந்நூலுக்குரிய உரையை மிகவும் தெளிவாக எடுத்து எழுதியவர்களும், சொன்னவர்களும், அதைக் கற்றவர்களும் பதினாறு பேறுகளையும் பெற்று உள்ளத்தில் மகிழ்வும் பெற்று எக்காலமும் என்றென்றும் வாழ்ந்து இவ்வுலகத்தை ஆட்சி புரிவார்கள் என்பது நிச்சயம், இது சத்தியம். . . அகிலம் ------------- திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத் திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர் எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம் நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம் . விளக்கம் ------------- இந்த அகிலத்திரட்டு அம்மானை நூலை மிகுந்த மன உறுதியுடனும், விருப்பத்துடனும், கேட்டவர்கள் தீய எண்ணமாகிய வினைகள் எல்லாம் தீர்ந்து ஞானமயமான இறையவரின் பாத்த்தின் நிறைவு மயமாகி நிலை பெற்று செழிப்புப் பொருந்திய இந்தப் பழைமையான உலகில் நிலைத்த வாழ்வும் பெற்று சிறந்த மக்களுடனும், சுற்றத்தாருடனும் பெருகி, மகிழ்ச்சியுடன் என்றென்றும் இவ்வுலகில் சாகாநிலை பெற்று எக்காலத்திலும் வாழ்வர். இது சத்தியம். . பதினேழாம் நாள் வாசிப்பும், அகிலமும் நிறைவடைந்தது. தொடரும்… அய்யா உண்டு. . காப்பு ---------- ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுத லுற்றேன் சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவசங் காராதமியே எங்களுட பவமே பவமே பலநாளுஞ் செய்த பவம றுத்தன் அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய் சிவசிவசிவசிவா அரகரா அரகரா அலையிலே துயில் ஆதிவராகவா ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை சிலையிலே பொன்மகர வயிற்றினுள் செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில் முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின் உற்றதெச்சண மீதில் இருந்துதான் உலகில் சோதனை பார்த்தவர் வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே திருமொழி சீதை யாட்குச் சிவதலம் புகழ எங்கும் ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி உகபர சோதனைகள் பார்த்துத் திருமுடி சூடித் தர்மச் சீமையில் செங்கோ லேந்தி ஒருமொழி யதற்குள் ளாண்ட உவமையை உரைக்க லுற்றார். . . அகிலம் மீண்டும் தொடரும்.... அய்யா உண்டு🙏. #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ளேழும் ஈன்றவழிச சான்றோரை எனமகக பூமக்கள் தங்களுக்கு  பொன்மக்க ளான என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத்  ன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்  ర இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப் பிறப்பிறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன் ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை அய்யா 24.09.2019 அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ளேழும் ஈன்றவழிச சான்றோரை எனமகக பூமக்கள் தங்களுக்கு  பொன்மக்க ளான என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத்  ன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்  ర இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப் பிறப்பிறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன் ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை அய்யா 24.09.2019 - ShareChat