சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 30 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 8 பேர் பலி!
மருத்துவமனையில் அனுமதி
மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற ஒரு அரசு பஸ்சும், காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்தும் சிவகங்கை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிக்கிய பயணிகள் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அருகில் இருந்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் அங்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் என்ன?
பஸ் விபத்து நேரிட்ட பகுதி குறுகிய சாலை என்பதாலும், இதில் பஸ்கள் அதி வேகமாக இயக்கப்படுவதாகவும் சிலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதிவேகமாக இயக்கப்பட்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
வேகம் குறைந்த காற்று.. அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது டிட்வா புயல்! வானிலை மையம் அப்டேட்
போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் விசாரணைக்கு பிறகே, பேருந்து டிரைவரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.
4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக பஸ்களானது திருப்பத்தூர் செல்லும் சாலையில் அதாவது பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை சற்று குறுகலானது என்றும் அதிகளவிலான வளைவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
அண்மைக்காலமாக பேருந்து விபத்துகள் அடிக்கடி நிகழ்வது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துவது, வாகனங்கள் விதி மீறல்களை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢


