ShareChat
click to see wallet page
search
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் டிசம்பர் 02, 1976* ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராக பொறுப்பேற்ற நாள். அவரது புரட்சிகர வரலாற்றில் இந்நிகழ்வு மற்றுமோர் மைல் கல். பிடல் காஸ்ட்ரோ கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 ல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 ல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24, 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - ShareChat