ShareChat
click to see wallet page
search
பிரிட்டிஷ்காரன் வந்த பிறகுதான் ஜாதி வேறுபாடுகளைப் புகுத்தினான் என்று சங்கிகள் கதை விடுகிறார்கள். அவர்களுக்கான வினாக்கள்! 1) சங்கராச்சாரி தீண்டாமை ஷேமகரமானது என்று சொன்னாரே அவரை பிரிட்டிஷ்காரன்தான் துப்பாக்கியைக்காட்டி அவ்வாறு சொல்லச் சொன்னானா? 2) உலகிலுள்ள உயர்ந்த சோப்புப் போட்டுக் குளித்தாலும் தீண்டத்தகாதவனின் பிறவி அழுக்குப் போகாது என்றாரே ஒரு சங்கராச்சாரி பிரிட்டிஷ்காரன் பீரங்கியைக்காட்டித்தான் அப்படி சொல்லச் சொன்னானா? 3) தீண்டத்தகாதவன் ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் வசிக்க வேண்டும் என்று சாணக்கியன் அர்த்தசாஸ்திரத்தில் சொல்கிறானே அவனை வெள்ளைக்காரன்தான் மிரட்டி அவ்வாறு எழுதச் சொன்னானா? 4) இன்றைக்கும் ஒரு பார்ப்பனரல்லாதார் சங்கராச்சாரியாக வர முடியவில்லையே அதற்கும் பிரிட்டிஷ்காரன்தான் காரணமா? 5) சங்கரமடத்தில் ஒரு சமையல்காரராகக் கூட பார்ப்பனரல்லாதார் வரக் கூடாது என்கிறார்களே அதற்கும் வெள்ளையன்தான் காரணமா? 6) காந்தியாரைக்கூட மாட்டுத் தொழுவத்தில் வைத்துத்தான் சங்கராச்சாரி பேசினார். அதற்கு எந்த வெள்ளைக்காரன் உத்தரவு போட்டான்? 7) இந்திராகாந்தி சந்தித்தபோது ஒரு கிணற்றிற்கு மறுபுறம் அமர வைத்துப் பேசினாரே சங்கராச்சாரி அதற்கும் பிரிட்டிஷார்தான் காரணமா? 8) பார்ப்பனருக்கு தொட்டுப் பிரசாதம் வழங்கும் சங்கராச்சாரி பார்ப்பனரல்லாதாருக்கு கையில் படாமல் தூக்கிப் போடுகிறாரே கையில் தொட்டுக் கொடுத்தால் தண்டனை என்று எந்த வெள்ளைக்காரன் சட்டம் போட்டான்? 9) பாலகங்காதர திலகர் வங்காளத்திற்கு சென்றால் அங்குள்ள பிராமணர் சமைத்த உணவை சாப்பிட மாட்டாராமே சித்பவன் பிராமணர் சமைத்ததைத்தான் சாப்பிடுவாராமே அதற்கும் பிரிட்டிஷார்தான் காரணமா? 10) மோடியால் பாரதரத்னா விருது வழங்கப்பட்ட மதன் மோகன் மாளவியா தண்ணீர்கூட பிற வருணத்தாரிடம் வாங்கி சாப்பிட மாட்டாராமே அதற்கு எந்த வெள்ளைக்காரன் காரணம்? 11) காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மற்றவர்கள் சமைத்ததை சாப்பிட்டால் தீட்டு என்று தனித்தனியாக சமைத்து சாப்பிட்டார்கள் என்று காந்தி சத்திய சோதனையில் எழுதியுள்ளாரே அதற்கும் பிரட்டிஷார்தான் காரணமா? 12) பிரிட்டிஷாரை விரட்டி அடித்து இந்திய மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசால் கூட்டப்பட்ட மாநாடுகளுக்குச் செல்லும் பார்ப்பனர்கள் பார்ப்பன சமையல்காரர் சமைத்த உணவைக்கூடச் சாப்பிடாமல் அய்ந்து நாளும் வெறும் காப்பியையும் உலர்ந்த பழங்களையும் மட்டுமே சாப்பிட்டும் இன்னொருவர் வீட்டிலிருந்து கொண்டுபோன புளிசாதத்தை மட்டுமே அய்ந்து நாட்களும் சாப்பிட்டார்களாமே, மற்றவர்கள் சமைத்ததைச் சாப்பிட்டால் செத்துப் போவாய் என்று உத்தரவு போட்ட வெள்ளைக்கார துரை யார்? 13) திருச்சி குடமுருட்டி ஆற்றில் குளிக்கும் படித்துறைகளில் பார்ப்பனர் மட்டுமே இங்கு குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டிருந்ததாக திருச்சி நகர் மன்றக் குறிப்புகளில் இருக்கிறதே அந்தப் படித்துறையில் பார்ப்பனரல்லாதார் குளித்தால் பார்ப்பனருக்குக் காய்ச்சல் வரும் என்று ஆலோசனை சொன்ன பிரிட்டிஷ் டாக்டர் யார்? 14) சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொன்ன திலகர் பெருமான் வங்கத்திற்குச் செல்லும்போது வங்காள பிராமணர் சமைத்ததை சாப்பிடக் கூடாது என்பதற்காக மராட்டிய சித்பவன் பார்ப்பன சமையல் காரரை அழைத்துச் செல்வாராமே அவருக்கு அப்படித்தான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய பிரிட்டிஷ் டாக்டர் யார்? 15) சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கும் பாகுபாடு காட்டப்பட்டதே அதற்கும் வெள்ளையன்தான் காரணமா? 16) வைக்கம் வீதிகளில் தீண்டத்தகாதவர் நடக்கக் கூடாது என்று உத்தரவு போட்ட வெள்ளைக்காரன் யார்? 17) கீழ்ஜாதிப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று உத்தரவு போட்ட வெள்ளைக்கார கவர்னர் யார்? 18) அய்யா வைகுண்டருக்கு முடிசூடும் பெருமாள் என்று வைத்தபெயரை முத்துக்குட்டி என்று மாற்ற வேண்டும் என்று ஆணையிட்ட வெள்ளைக்கார துரை யார்? 19) கேரளாவில் அய்யன்காளி என்பவர் கட்டிய பள்ளிக் கூடத்தை ஒரே இரவில் தீவைத்துக் கொளுத்திய வெள்ளைக்காரன் யார்? 20) அம்பேத்கர் பள்ளிக் கூடம் சென்றபோது அவரை சாக்குப்பை போட்டு தனியாக அமர வைத்த வெள்ளைக்கார வாத்தியார் பெயர் என்ன? 21) அவரை மாட்டுவண்டியில் இருந்த கீழே தள்ளி விட்ட வெள்ளையன் எவன்? 22) அம்பேத்கர் மகத் குளத்தில் தண்ணீர் அருந்தியதால் குளம் தீட்டாகி விட்டது என்று மாட்டு மூத்திரம் மாட்டு சாணி பால் தயிர் கொண்ட பஞ்சகவ்யத்தை ஊற்றி தீட்டுக்கழித்த அதிகாரியின் பெயர் என்ன? 23) அவர் காலாராம் கோயிலுக்குள் நுழைய முயன்றபோது அவரை நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய பிரிட்டிஷார் பெயர் என்ன? 24) திருச்செந்தூர் கோயிலுக்குள் நுழைய முயன்ற நாடார்களை நுழையக் கூடாது என்று லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று வழக்குப் போட்ட வெள்ளைக்கார வக்கீல் யார்? 25) திருவரங்கம் கோயிலில் தீண்டத்தகாதவர் நுழையக் கூடாது என்று போர்டு வைக்கச் சொன்ன அந்நியன் எவன்? 26) திருவரங்கம் கோயிலுக்குள் நுழைய முயன்ற தாழ்த்தப்பட்டவர்கள் மீது மிளகாய்ப்பொடியைத் தூவித் தாக்குதல் நடத்தியவன் ஜெனரல் டயரா? 27) அப்படி மிளகாய்ப்பொடி தூவிய பெண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியபோது பொம்மனாட்டிய அடிச்சிட்டாளே என்று தேம்பித்தேம்பி அழுதாராமே சங்கராச்சாரி அதற்குக் காரணமும் வெள்ளைக்காரனா? 28) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வைத்தியநாத அய்யர் தீண்டத்தகாதவர்களை அழைத்துச் சென்றாராமே அதனால் தீட்டாயிடுத்து என்று தீட்டுக்கழிக்க வைத்த வெள்ளைக்காரன் யார்? 29) ஜோதிபூரில் தலித் மணமகன் குதிரை சவாரி செய்யக் கூடாது என 2025 நவம்பரிலும் உயர்ஜாதியினரால் தடுக்கப்பட்டாரே வெள்ளையன் போய் 80 ஆண்டுகள் ஆன நிலையிலும் தலித்துகளுக்கு விடுதலை அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுச் சென்ற பிரிட்டிஷ் கவர்னர் யார்? 30) 1989 எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ள நிலையிலும் குஜராத் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் ஹரியானா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறுவதற்கு வெள்ளைக்காரன் காரணமா? அமெரிக்காக்காரன் காரணமா? இன்னும் ஏராளமான வினாக்கள் விடை தெரியாமல் இருக்ிறது. முதலில் இதற்கு பதில் கூறுங்கள் சங்கிகளே! Arumugam Bhel 9442148697 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - செய்தது ஆண்டுகள் காங்கிரஸ் நாட்டிற்கு 60 எனன (42 நீங்க  உத்துட்டு இருக்குறது  Url, நாங்க உருவாக்குனது தான்டா  செய்தது ஆண்டுகள் காங்கிரஸ் நாட்டிற்கு 60 எனன (42 நீங்க  உத்துட்டு இருக்குறது  Url, நாங்க உருவாக்குனது தான்டா - ShareChat