ShareChat
click to see wallet page
search
#🚍ஆண்களுக்கும் இனி இலவச பயணம்! 🎉 #📰ஜூன் 9 முக்கிய தகவல் 📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 தட்டித் தூக்கும் தமிழக அரசு.. ஆண்களுக்கும் இனி இலவச பயணம்! விடியல் பயணம் 2.0.. ஸ்டாலின் மாஸ் ப்ளான்! சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்று தமிழகத்தில் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற திட்டம் என்றால் அது பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் விடியல் பேருந்து பயண திட்டம் தான். இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விடியல் பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்யும் திட்டம் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://sharechat.com/profile/cholannew?d=n தமிழ்நாட்டில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள 'விடியல் பேருந்து பயணம்' கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கும் இந்தத் திட்டம், பெண்களின் அன்றாட செலவுகளை குறைப்பதோடு, அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பையும் வழங்கி வருகிறது https://sharechat.com/profile/cholannew?d=n குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் என அனைத்துத் தரப்பினரும் தினசரி இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அரசு வெளியிட்டுள்ள கணக்குகள்படி, தினமும் 57 லட்சம் பெண்கள் விடியல் பயணத்தின் மூலம் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.https://sharechat.com/profile/cholannew?d=n விடியல் பயணம் திட்டம் இந்தத் திட்டம் பெண்களுக்கான ஒரு முக்கிய நலத்திட்டமாக மாறியுள்ள நிலையில், ஆண்களுக்கும் இதே போன்ற இலவச பேருந்து பயணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இது அவசியம் என்று பல சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதே கோரிக்கை தற்போது மீண்டும் எழுந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு ஒரு முக்கியமான முடிவை எடுக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது https://sharechat.com/profile/cholannew?d=n இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் திட்டத்தை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியாகும் என்று அரசின் போக்குவரத்துத்துறை மூலம் வெளியாகியுள்ளன. பெண்கள் ஏற்கனவே விடியல் பயணத் திட்டத்தின் பயனாளிகளாக இருப்பதால், ஆண்களுக்கும் அதே சலுகையை வழங்குவது இயல்பான முன்னேற்றமாக கருதப்படுகிறது https://sharechat.com/profile/cholannew?d=n முதியவர்கள் பேருந்து திட்டம் தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களுக்கான பல சலுகைகள் ஏற்கனவே இருப்பினும், இலவச பேருந்து பயணம் என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்கக் கூடியதாக இருக்கும் என்பதாலும், அரசு நடத்தும் பேருந்துகளில் மாதாந்திர அட்டைகள், கட்டண சலுகைகள் போன்றவை இருந்தாலும், இலவச பயணம் வழங்கப்படும் போது 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களின் மருத்துவம், வங்கி, அரசு அலுவல்கள் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கான செலவுகள் குறையும். இதனால் அவர்கள் அன்றாட வாழ்வில் நிதிசுமை குறையும் என்பதே அரசின் கணிப்பு.https://sharechat.com/profile/cholannew?d=n 2026 தேர்தல் பெண்களுக்கு வழங்கப்பட்ட விடியல் பயணம் திட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றதால், ஆண்களுக்கும் இதே போன்ற திட்டத்தை விரிவாக்குவது அரசுக்கு ஆதரவை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தின் நிதிநிலை சீராகும் போது அனைவருக்கும் இலவசப் பயணத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு மாதங்களில் அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு உள்ளது.
🚍ஆண்களுக்கும் இனி இலவச பயணம்! 🎉 - CHOLAN NEWS CHOLAN NEWS - ShareChat