*அக்டோபர் 14, 1887*
டாக்டர் ஆற்காடு லட்சுமணசுவாமி முதலியார் பிறந்த தினம்.
இவர் தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார்.
இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆற்காடு ராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள்.
இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர். உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ம் ஆண்டுகளில் செயல்பட்டார்.
எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ம் ஆண்டிலும் 14 வது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ம் ஆண்டிலும் செயற்பட்டார்.
கிராமப்புற மருத்துவ சேவை வரலாற்றில் 1959 ம் ஆண்டில் முதலியார் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை.
இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺