பஞ்ச நரசிம்ம தலங்கள் 03 & 04 : திருநகரி ஹிரண்ய நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர்
பஞ்ச நரசிம்ம தலத்தில் அடுத்த ஆலயம் திருநகரியில் அமைந்திருக்கும் ஆலயம், இது மங்கை மடத்தில் இருந்து இரண்டு கல் தொலைவில் அமைந்துள்ளது இங்கே மூன்றாம் நான்காம் நரசிம்மர்கள் ஒரே ஆலயத்தில் காட்சியளிகின்றார்கள்
இங்கு பகவான் ஸ்ரீஹிரண்ய நரசிம்மர் என்றும் யோக நரசிம்மர் என்றும் இரு சன்னதிகளில் அருள் புரிகின்றார், இந்த ஆலயம் திவ்யதேத்த்
திருநகரி ஆலயம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் வந்துபாடி மங்களசாசனம் செய்த ஆலயம் இது, திருமங்கை ஆழ்வாருக்கு பகவான் தரிசன்ம் கொடுத்து அவரை ஆட்கொண்ட இடமும் இதுதான்
இங்கே ஹிரண்யகசிபினை தூக்கி ஆகாயத்தில் வதம் செய்யும் வடிவத்துடன் ஹிரண்யநரசிம்மராக பகவான் முதலில் காட்சி தருகின்றார், இது ஹிரண்யனை அழிக்க வந்த நரசிம்ம கோலம் என்றாலும் கொஞ்சம் ஆழமாக நோக்கதக்கது
பகவானின் ஐந்து குணங்களில் மூன்றாம் நிலை "அந்தர்யாமித்துவ நிலை" என்பது, ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்த்தும் யோக தத்துவம, தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது அந்த தத்துவமே
அப்படி பிரஹலாதன் அதை சொல்லை அவன் வாக்கினை மெய்பிக்கும் பொருட்டு தூணில் இருந்து வெளிவந்த நரசிம்மர் ஹிரண்யனை வதம் செய்தார், அவர் "அந்தர்யாமித்துவ"மாக எங்கும் எல்லா பொருளிலும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார் என்பதை ஆழ சொல்லும் ஆலயம் இது
அதனாலே இது ஆகாய தத்துவமாகவும் அறியபடுகின்றது, ஆகாய வெளியில் இருந்துதான் எல்லாமும் உண்டாயின, பகவான் ஆகாயமாகவும் அதன் கீழ் உள்ள எல்லாமுமாகவும் வியாபித்திருக்கின்றான், இங்கு காணும் எல்லாமும் பகவானே அவனுக்கு தெரியாமல் அறியாமல் ஒரு அணுவும் அசையாது எனப்தை அழகுற சொல்லும் தாத்பரியம் இது
எப்படி சைவர்களுக்கு சிதம்பரம் ஆலயம் ஆகாய தத்துவத்தை அம்பலம் என சொல்லுமோ அப்படி "அந்தர்யாமித்துவ" கோலத்தை ஆகாய தத்துவத்தை வைஷ்ணவ பாரம்பரியத்தில் சொல்லும் ஆலயம் இது
இந்த நரசிம்மரை தரிசித்தால் எதிரிகள் தொல்லை மறையும், அஞ்ஞானம் மறையும் அறியாமை மறையும் என்பதால் இந்த நரசிம்மரை தரிசிப்போர்க்கு எவ்வித எதிரிகளும் உள்ளேயும் வெளியேயும் இருக்கமாட்டார்கள்
ஒரு மனிதனுக்கு எதிரி வெளியில் மட்டுமல்ல குழம்பிய மனம், தேவையற்ற சிந்தனைகள் நிரம்பிய மனம், ஆயிரம் எண்ணங்களால் அலைபாயும் மனம் என எதிரிகள் உள்ளேயும் உண்டு, அதை தாண்டித்தான் வெளியே உண்டு
பகவான் இங்கு ஆகாய தத்துவமாக இருப்பதால் அவர் எல்லாம் அறிந்த நிலையில் அவருக்குதெரியாதது எதுவுமில்லை எனும் நிலையில் உங்கள் எதிரிகள் யாராக எதுவாக இருந்தாலும் ஒழித்து ஒடுக்கி தருவார், நல்வழியில் காத்தும் தருவார்
அடுத்த சன்னதி யோக நரசிம்மர், யோகம் என்பது புலன்களை அடக்கி மனதால் பகவானை தரிசித்து அவரோடு ஐக்கியமாகுதல் என்பதால் தன்னுள் இறைவனை காணுதல் என்பதால் இந்த யோக நரசிம்மர் ஞானம் வழங்குவார் தெளிந்த நல்லறிவினை வழங்குவார்
பூமியில் வாழும் மனிதன் தன்னில் இறைவனை காணும் அருளை பகவான் தரும் இடம் என்பதால் இது பூமி தத்துவ தலமுமாயிற்று, பகவானின் ஐந்து தொழில்களில் இது விபவ நிலை அதாவது நல்ல அருளை தர பகவான் வரும் அருள்கோலமுமாயிற்று
பகவான் நல்லகாரியங்களை நிறைவேற்ற பூமிக்கு வந்தபோதெல்லாம் பெரும் போதனைகளை அருளினார், ராமனும் கண்ணனும் அதில் முக்கியமானவர்கள் பெரும் ஞானியர்கள், அப்படி யோக நரசிம்மர் பெரும் ஞானத்தையும் அதனால் நல்வழிபோதிக்கும் அருளையும் இங்கு தருவார்
இந்தத் தலத்தின் மூலவர் ஸ்ரீகல்யாண ரங்கநாதர். தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் என்றாலும் இந்த இரு நரசிம்மர் சன்னதிகளும் இங்கு முக்கியாமானது
இந்த ஸ்ரீகல்யாண ரங்கநாதரருக்கு சனிகிழமை மாலை சாற்றி நெய்யில் தீபமிட்டு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்த வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும், கல்வி கேள்விகளில் ஞானம் கிடைக்கும்
ஸ்ரீயோக நரசிம்மருக்கு செவ்வரளிப் பூமாலை சார்த்தி, நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். வியாபாரத் தடைகள் நீங்கும்; எடுத்த காரியங்கள் யாவும் எளிதில் கைகூடும்
ஹிரண்ய நரசிம்மருக்கு நீலநிறப்பூக்கள் சார்த்தி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். நிம்மதியும் சந்தோஷமும் சூழும்
பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரம் ஆகிய நாட்களில் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர் மற்றும் ஸ்ரீகல்யாண ரங்கநாத பெருமாளை வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் வரும்
இங்கே ஆழ கவனிக்கவேண்டிய விஷயம் ஹிரண்ய நரசிம்மருக்கு நீல நிறபூக்கள் என ஆகாய நிறமும், யோக நரசிம்மருக்கு செம்மண் எனும் நிலத்தை குறிக்கும் அரளிபூ வழிபாடும்
அதாவது வானுக்கும் மண்ணுக்குமான தொடர்பை சொல்லும் தாத்பரிய ஞான போதனையின் உச்சம் இது, அந்தரத்தில் ஹிரண்யனை பகவான் வதம் செய்தார் என்பது அவன் எந்த ஆகாயத்தில் இருந்து வந்தானோ எந்த மூலத்தில் இருந்து வந்தானோ அங்கே எடுத்துகொள்ளபட்டான் எனும் தத்துவம்
யோக நரசிம்மர் என்பது பூமி தத்துவம் , அதாவது பூமியில் பிறந்த மானுடன் மேல்நோக்கி செல்லவேண்டும் அகங்காரம் நீங்கி ஆணவம் நீங்கி யோக நிலையில் உயர்ந்து இறைநிலை அடையவேண்டும் என்பதை சொல்வது
ஹிர்ண்யனை அந்தரத்தில் பகவான் அழித்தது ஆணவம் நீங்கிய ஆத்மா, அகங்காரம் நீங்கிய ஆத்மா மேலே உயர்ந்து இறைவனை அடையும் என்பது
ஆக பூமியில் மானுடராய் இருந்து யோக பக்தியால் இறைபக்தியால் இறைவனை அடையலாம், ஆணவம் நீங்கினால் அடையலாம் அதற்கு பகவான் எப்போதும் அருள் செய்வார், அபப்டித்தான் திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வாரெல்லாம் அப்படித்தான் இறை நிலை அடைந்தார்கள்
இன்னும் இந்த அலய தாத்பரியத்தை விளக்க வேண்டுமென்றால் விஞ்ஞான வரிகளில் விளக்க வேண்டுமென்றால் இந்துமதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் உள்ள தொடர்பை இந்த ஆலயம் கொண்டு புரியவேண்டுமென்றால் ஆழ்வார் பாடலை கொண்டே புரியலாம்
"ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெலாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே"
விஞ்ஞானம் இந்த பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை சொல்வது இப்பாடலிலும் இருக்கின்றது
அதாவது இந்த உலகம் வெளியில் அதாவது எல்லையும் , முடிவும் தொடக்கமற்ற இந்த வெளி எனும் ஆகாயத்தில் இருந்து காற்று தோன்றும்
காற்றில் இருந்து அக்னி உருவாகும், அக்னியும் காற்றும் வெளியும் சேர்ந்து நீர் உருவாகும், நீரில் இருந்து நிலம் உருவாகும் , நிலத்தில் உயிர்களெல்லாம் உருவாகும்
பின் அழியும்போது நிலம் நீரால் அழியும், நீரானது அக்னியின் வெப்பத்தால் இல்லாது போகும் , அக்னி காற்றில் கரையும், காற்று ஆகாயத்தில் இல்லாமல் போகும்
இதுதான் இந்த உலகம் தோன்றி மறையும் சுழற்சி, விஞ்ஞானமும் இதைத்தான் சொல்கின்றது
இதை என்றோ சொன்ன இந்துமதம் இந்த ஐந்து பூதங்களை சைவமரபில் சிவன் என்றது, அந்த ஐந்து தொழில்கள் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மறைதல் என்பதை சொல்லிற்று
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே"
என திருவாசகம் சொல்லும் பாடலின் தத்துவம் இதுதான்
"ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே"
என அபிராமி பட்டர் அதனை பாடினார்
இந்த தத்துவங்களைத்தான் நுணுக்கமாக இவ்வாலயமும் சொல்கின்றது, ஆகாயத்தில் இருந்தே நீர் நிலம் காற்று பூமி என எல்லாம் உண்டானது அந்த பூமி மானுடர் கர்மம் கழிக்கும் இடமாக உள்ளது, மானுடர் அந்த பூமியில் வாழும்போது இறைவனை நோக்கி சென்று அகங்கார அந்தகாரங்களை நீக்கி மனதால் செம்மைபட்டு இறைநிலை நோக்கி செல்வதே அவர்கள் கர்மம் அந்த கர்மம் செய்யும் வலிமையினை பலத்தை தரும், கார்த்திகையில் அந்த பலனை இங்கு வழிபட்டு பெற்று கொள்வோர் பாக்கியவான்கள்.
#✨கடவுள் #🪔கார்த்திகை தீபம்💫 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள்


