வீரபுருஷோத்தமனின் வனவாசகாலத்தில் நடந்த ஒருசம்பவம்!
..............................................................................
அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்!
வனக்காடுகளில் இராமலக்ஷமண குமாரன்மார்களும் சீதையும் சஞ்சரிக்கின்றார்கள்!
இப்போது புனிதமான கங்காநதி தென்படுகிறது.
கங்கையை கடந்துதான் அக்கரைக்கு செல்லவேண்டும்
இராமலக்ஷமண குமாரர்கள்.
அப்போதுதான் குகன் முதல்முதலாக வீரபுருஷோத்தமனை சந்திக்கின்றார்.
இராமரும் முதல்முதலாக குகனை சந்திக்கின்றார்!
இருந்தாலும் குகன் என்கிற ஓடத்தை ஒட்டுகின்ற ஓடக்காரனு க்கு இந்த நிலைமை வீரபுருஷோத்தமனுக்கு வந்தது ஏன்?
என்பதையெல்லாம் அறிந்திருந்தான்!
ஒரு கம்பீரமாக அயோத்திராஜனாக ராஜஆட்சியை நடத்திகொண்டு இருக்கவேண்டியவர்!
இங்கே மரவுரி தரித்துகொண்டு நடப்பதைபார்த்து அந்த ஓடக்காரனால் அந்த கோலத்தை பார்த்து சகிக்கமுடியாமல் அழுகின்றான்!
குகன் கேட்கின்றான்!
அல்லயோ! மகாபிரபுவே!
என்னால் ஏதாவது சிறிய உதவி செய்யமுடியுமா? தாங்களுக்கு! என்றான்!
இந்த கங்காநதியை கடக்கவேண்டும்!
அதற்கு ஒரு ஓடம் வேண்டும்!
ஒரு ஓடக்காரனும் வேண்டும்!
குகன் உடனே அருகேயிருந்த மற்றொரு ஓடக்காரன் ஆகிய கேவத் என்பவனை அழைக்கின்றார்!
கேவத்!
இதோ நிற்கின்றாரே!
இவர்தான் அயோத்தியின் வீரபுருஷோத்தமன்
அருகே இருக்கும் வனிதை அவரின் கெட்டியோளான சீதைபிராட்டி!
கூடவே இருக்கின்ற யௌவனன்
உடன்பிறந்தோன் இலக்ஷ்மணன்!
அவர்களை அக்கரையில் சேர்க்கவேண்டும் என்றான் குகன்!
உத்திரவு குகனே!
சொன்னதுபோலவே செய்கின்றேன்!
அதற்குமுன்னர் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நான் கழுவவேண்டும் என்றான் கேவத்!
இல்லையில்லை!
அக்கரையில் சேர்த்தபின்னர் பாதபூஜை செய்துகொள்ளலாம் என்றான் குகன்!
கேவத்! மன்னிக்கவேண்டும்!
என் ஓடத்தில் அவர்களின் பாதங்கள் வைப்பதற்கு முன்னே பாதங்களை கழுவித்தான் ஓடத்தில் ஏற்றமுடியும்!
அவர்களின் பாதங்களில் ஒரு மண் ஒட்டியிருந்தாலும் என்னால் ஓடத்தில் அக்கரை சேர்க்கமுடியாது என்றான் கேவத்!
குகனுக்கு கடும்கோபம்கொண்டான்!
அவனின் கோபத்தை உணர்ந்துகொண்ட கேவத்!
அவனை நோக்கி சொன்னான்!
குகனே!
உன்னுடை கோபத்தை உணர்ந்துகொள்கின்றேன்!
இருந்தாலும்!
இந்த மகாபிரபு வீரபுருஷோத்தமன்
காலை வைத்தால் கல்லும் பெண்ணாகும்!
அகலிகை என்கிற ஸ்த்ரீ கல்லாகிபோனாள்
அதன்பிறகு இவரின் திருப்பாதங்களை கொண்டு அவள் மறுபடியும் பெண்ணானாள்!
இந்த தாரீத்யஜீவிதம் நடத்திகொண்டு இருக்கும் எனக்கும் அந்த சம்பவம் அறிந்துள்ளேன்!
ஒருவேளை! என்னுடைய படகும் ஏதாவது முன்ஜென்ம பாபகர்ம்மங்கள் செய்து இந்த புனிதகங்காநதியில் ஓடமாக இருக்கவேண்டும் என்று விதிக்கபட்டு இருக்கலாம்!
இந்த ஓடமும் ஒரு பாபவிமோசனம் வேண்டி காத்திருக்கலாம்!
இவரின் பாதங்கள் என் ஓடத்தின்மீது பட்டு பாபவிமோசனம் பெற்று ஒரு பெண்ணாக மாறிவிட்டால்!
அந்த பெண்ணையும் காப்பாற்றவேண்டும்!
ஏற்கனவே ஒரு கெட்டியோளோடும் ,பிள்ளைகளோடும் கூடி தாரித்யஜீவிதம் நடத்திகொண்டு இருக்கும் இவளை எவ்வாறு காப்பாற்றமுடியும்!
அதுமட்டுமில்லாமல்!
இந்த ஓடம்தான் என் குடும்பத்திற்கு ஜீவாதாரம்!
ஒரு பாபவிமோசனம் கொண்டு இந்த ஓடத்தையும் நஷ்டப்பட்டுபோனால் ஜீவாதாரத்திற்கு என்ன செய்யமுடியும்?
ஆகையினால் தான் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நன்றாக கழுவி துடைத்த பின்னர்தான் என்னால் ஓடத்தில் ஏற்ற முடியும்! என்றான் கேவத்!
அது தனூர்மாதம்!
கடும்குளிர்காலம் அதிகாலையில்! இந்த சம்பவம் நடக்கின்றது!
அந்த நேரத்தில் அருகேயிருக்கும் குடிசையிலிருந்து கேவத் கெட்டியோளும் வந்துவிட்டாள்!
இராமலக்ஷமண குமாரர்களும் ,சீதையும் அவனின் அக்கறை பேச்சு! பக்தி பயம் ஆகியவற்றை பார்த்து சந்தோஷிக்கின்றார்கள்!
இராமரின் திருப்பாதங்களை கழுவ சம்மதிக்கின்றார்!
கேவத்தும் அவனின் கெட்டியோளும் சேர்ந்துகொண்டு வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை கழுவுகின்றனர்!
கங்காநதியில் நீரை எடுத்து இராம பாதங்களை நீராட்டு நடத்திவிட்டு நன்றாக அவரின் பாதங்களை துடைத்துவிட்டு அக்கரையில் சேர்க்கின்றான் கேவத்!
அக்கரையில் அவனின் பயபக்தியோடு கூடிய சேவனம் கண்டு சந்தோஷித்த சீதை ஒரு மோதிரத்தை சன்மானமாக கொடுக்கின்றாள்!
இருந்தாலும் கேவத் அதை ஏற்க மறுக்கின்றான்!
அல்லயோ! தேவியே!
நான் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நீராட்டு நடத்தியதே முன்ஜென்ம புண்ணிய பாக்கியம்!
அதற்காக சன்மானம் கொடுத்துவிட்டால் அந்த புண்ணியபாக்கியத்தை சக்தி குறைந்துவிடும் என்றான் கேவத்!
சீதை சொன்னாள்!
அப்படியென்றால்
தாங்கள் எங்களையெல்லாம் ஓடத்தில் ஏற்றிகொண்டதற்கு கூலியாக வாங்கிகொள்ளுங்கள் என்றாள்!
அதற்கும் மறுத்துவிடுகின்றான் கேவத்!
அவனின் பேச்சு அனைவரையும் புரியாத சூழ்நிலை ஆகின்றது!
அதை உணர்ந்துகொண்ட கேவத்!
அல்லயோ! மகாபிரபுவே!
ஒரு வண்ணான் இன்னொரு வண்ணானின் அழுக்கு வஸ்திரங்களை துவைப்பதற்கு கூலி வாங்கமாட்டான்!
அதேபோல்தான் ஒரு நாவிதர் இன்னொறு நாவிதருக்கு சவரம் செய்துவிட்டாலும் கூலி வாங்கமாட்டான்!
அதேபோல்தான்!
ஒரு ஓடக்காரன் இன்னொரு ஓடக்காரனை யாத்தை செய்துவித்தால் அதற்கும் கூலி வாங்கமாட்டான்!
அது தொழில் தர்ம்மம்!
மகாபிரபுவே!
தாங்களும் என்னைபோலவே ஓடக்காரன் தான்!
உங்களின் ஓடம் பெரியது!
என்னிடம் சிறியது!
நான் இந்த ஓடத்தைகொண்டு கரையை கடக்க உதவிசெய்கின்றேன்!
அதற்கு கூலியும் வாங்குகின்றேன்!
தாங்களோ! மனுஷ்யன்மார்கள் செய்கின்ற பாபகர்ம்மங்கள் அவர்களின் பாபகர்ம்மங்களில் இருந்து கரையை கடக்க தாங்களின் இராமநாமம் உதவி செய்கின்றது!
ஜென்மஜென்மாந்திரம் செய்த பாபகர்ம்மங்கள் விமோசனம் ஆகின்றது! தாங்களின் நாமம் ஜெபிக்கின்றோர்களுக்கு!
ஆகவே மனுஷ்யன்மார்கள் செய்கின்ற பாபகர்ம்மங்களிலிருந்து விமோசனம் நல்கி புண்ணிய அக்கரைக்கு கொண்டு செல்கின்ற நீங்களும் என்னைபோலவே தாங்களும் ஒரு ஓடக்காரன் தானே!
ஆகவே ஓரு ஓடக்காரன் மற்றொரு ஓடக்காரனிடம் கூலி வாங்குவது,
நியதி அல்லவே!
என்று சொல்லி வீரபுருஷோத்தமனை இரு கரம்கூப்பி நமஸ்கரிக்கின்றான் .
அந்த ஓடக்காரன் இராமதாசன் கேவத்!
இராமஜெயம்!
என்று சொல்கின்றவர்களுக்கு
ஏது பயம்!
இராம்! இராம்! இராம்!
இவன்
ஸ்னேகம்கூடிய
அஜய்குமார் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஜெய் ஆஞ்சநேயா


