#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் *நவராத்திரி* *ஒன்பதாம் நாள்*
*சித்திகளை அருளும் ஒன்பதாம் நாளான சாமுண்டி* *பூஜை*
*அம்மன் வடிவம் :* சாமுண்டி
*பூஜையின் நோக்கம்* :
சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல்.
*அம்மன் வடிவம் :*
தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள்.
முண்டமாலையும் அணிந்தவள்.
முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள்.
மிகவும் சினம் கொண்டவள்.
தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள்.
தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் : தீப துர்க்கை.
யோகிகள் யோகத்தால் தவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதால் தீப துர்க்கை என்று அழைக்கப்படுகின்றாள்.
*பூஜை விவரங்கள்*
*அன்னைக்கு சாற்ற வேண்டிய* *மாலை* :
தாமரை
*அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை :* மரிக்கொழுந்து
*அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* : வெள்ளை நிறம்
*அன்னையின் அலங்காரம்* : சுபத்ராதேவி அலங்காரம்
*அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள் :*
வெண் மலர்கள்.
*கோலம்* :
கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போட வேண்டும்.
*நைவேத்தியம் :* அக்கார வடிசல்
*குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது* :
10 வயது
*குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள்* : சௌபாக்கியம் உண்டாகும்.
*பாட வேண்டிய* *ராகம்* :
வசந்தா
*நடனம்* : கோலாட்டம்
*குமாரிக்கு தரவேண்டிய* *பிரசாதம் :* திரட்டுப்பால்
*பலன்கள்* :
இஷ்ட சித்திகளை அருளக்கூடியவள்.
🙏🪷🙏


