ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்கள் 1862 ஆம் ஆண்டு முதல் தற்போதைய உச்சி பிள்ளையார் கோவில் மலை மீதே (திருப்பரங்குன்றம் முருகர் கோயில் அருகே) தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் மட்டுமே கோவில் நிர்வாகம் மூலம் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் திருப்பரங்குன்றத்தில் அருகருகே தீபம் ஏற்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீபம் ஏற்றப்பட்டு வரும் ஆலய நடைமுறையில் மாற்றம் செய்ய நீதிபதிக்கு உரிமை இல்லை அது ஆகம விதிகளுக்கு எதிரானது.கோவில் அர்ச்சகர்கள் தலைமை அர்ச்சகர் அறங்காவலர் குழுவினர் ஆகியோர் தான் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி வருகின்றனர். சர்சைக்குரிய இடத்தில் தர்க்கா பிரச்சினை உள்ளது. அவ்வாறு இருக்கையில் தர்க்கா தரப்பு நியாயத்தை கேட்காமலேயே தீர்ப்பு வழங்கியது தவறு அங்கு இருப்பது தீப தூண் அல்ல. எல்லைக்கல். இது போன்ற எல்லை கல் அதே இடத்தில் ஆறு உள்ளது. நீதிமன்ற உத்தரவால் தான் கலவரம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவால் சமூக நல்லிணக்கம் சட்டம் ஒழுங்கு கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்படும் முன்பு இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்கவில்லை. மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் வழங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய கால அவகாசமும் வழங்கப்படவில்லை. மதப்பிரச்சினை உருவாகும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. கலவரம் ஏற்படுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தீபம் ஏற்ற பத்து பேருக்கு தான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் மனுதாரர் ராம ரவிக்குமார் பெரும் கூட்டத்தை கூட்டிக்கொண்டு பல நூற்றுக்கணக்கான பேரை அழைத்துக் கொண்டு பேரிகார்டை உடைத்து துவம்சம் செய்து சென்றனர். மனுதாரர் மீதே நீதிமன்றம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போட்டிருக்க வேண்டும். பத்து பேருக்கு பதிலாக பல நூறு பேரை அழைத்துச் சென்றதால், மனுதாரர் தரப்பினரால் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு சிஐஎஸ்எஃப் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது தவறு. கோர்ட்டு பாதுகாப்பு காவலர்களை ராம ரவிக்குமாருக்கு பாதுகாப்புக்கு அனுப்பியது தவறு பாதுகாப்பு கேட்டு மனுதாரர் விண்ணப்பித்தாரா? விண்ணப்பித்த பின் விசாரித்து பிறகு பாதுகாப்பு வழங்கப்பட்டதா? 5:30 க்கு விசாரித்து 6:05 மணிக்கு தீர்ப்பை சொல்ல முடியுமா.45 பக்க தீர்ப்பை எப்படி எழுதி படிக்க முடியும்? அழைப்பு விடுத்தால் 10 அல்லது 15 நிமிடங்களில் தான் CISF வீரர்கள் வரமுடியும் எனும் போது,ராம ரவிக்குமார் பத்து பேரை அழைத்துக்கொண்டு தீபம் ஏற்றலாம் என உத்தரவு பிறப்பித்த அடுத்த நொடி வீரர்கள் மனுதாரருடன் இணைந்தது எப்படி? CISF என்பது நீதிமன்ற பாதுகாப்புக்கு மட்டுமே. மனுதாரரின் பாதுகாப்புக்கு அல்ல. CISF வீரர்கள் நீதிமன்ற பாதுகாப்பை மட்டுமே கவனிப்பார்கள். சட்டம் ஒழுங்கை காக்க அனுப்பப்பட்டவர்கள் அல்ல. CISF என்பது தமிழ்நாடு காவல்துறைக்கு இணையானதும் அல்ல. மத்திய போலீசையும் மாநில போலீசையும் மோதவிட்டு மத்திய மாநில சண்டைக்கு வித்திடும் வகையில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பு அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் மட்டுமே ஆலய நிர்வாகம் தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறை. திருப்பரங்குன்றத்தில் இரண்டு இடங்களில் தீபம் ஏற்றச்சொல்வது மத நம்பிக்கையை புன்படுத்தும் செயல்.
📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢 - BREAKING  புதிய தலைமுறை 30 உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட் விரைந்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் சார்பில் முறையீடு தமிழ்நாடு அரசு ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையின் அடிப்படையில் பட்டியலிடப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி Puhiyatnalaimurai com . 05.12.2025 BREAKING  புதிய தலைமுறை 30 உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட் விரைந்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் சார்பில் முறையீடு தமிழ்நாடு அரசு ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையின் அடிப்படையில் பட்டியலிடப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி Puhiyatnalaimurai com . 05.12.2025 - ShareChat