ShareChat
click to see wallet page
search
செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே இந்த தேர்வுகள் வருகிற 26ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், வருகிற 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்படப்படவுள்ளது. எனவே காலாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. அரசு பள்ளிகளில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது. இதுவே தனியார் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால் 6 நாள் மட்டுமே விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இதனை தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைக்கவுள்ளது. எனவே காலாண்டு விடுமுறையொட்டி வெளியூர் செல்ல மாணவர்களோடு பெற்றோர்களும் பயண திட்டங்களை வகுத்து வருகிறார்கள் #📰தமிழக அப்டேட்🗞️ #காலாண்டு விடுமுறை நீட்டிப்பு😃😁 #பள்ளி காலாண்டு விடுமுறை ஆறிவிப்பு 🥰🥳🥳💥
📰தமிழக அப்டேட்🗞️ - ணவர்களுக்கு குஷி ! LDIT காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்களா ? அசத்தல் அறிவிப்பு ணவர்களுக்கு குஷி ! LDIT காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்களா ? அசத்தல் அறிவிப்பு - ShareChat