ShareChat
click to see wallet page
search
👍ஒருத்தரை நம்பினால் முழுமையாக நம்ப வேண்டும் 👍 ஏழு பேர் கொண்ட மலையேற்றக்குழு 3500 மீட்டர் உயரமுடைய செங்குத்தான மலையின் உச்சியை அடைந்தது...!! சிறிது நேர ஓய்வுக்கு பிறகு குழுவினர் தரை இறங்க ஆயத்தமாகினர் ஆனால் பழனி என்ற ஒருவர் மட்டும் நான் இங்கே இரவு தங்கிவிட்டு நாளை வருகிறேன் என்றார்...!! உடன் வந்தோர் கீழிறங்கி விட்டனர் செங்குத்தான மலையில் முக்காலடி அகலமே உடைய பாறையில் இரவில் பழனி படுத்து உறங்க தொடங்கினார்...!! நடு இரவில் தன்னை அறியாமல் நழுவி மலையில் உருண்டார் விழித்துக் கொண்ட பழனி ஆபத்தை உணர்ந்து ஆண்டவா காப்பாற்று என கதறி அழுது வேண்டினார்...!! நல்ல வேளை அவருடைய கைகளுக்கு ஒரு மரக்கிளை தட்டுப்பட மரக்கிளை தன்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு இறைவா நான் உன் பக்தன் என்பது உண்மையானால் நீ இங்கே நேரடியாகத் தோன்றி என்னை காப்பாற்ற வேண்டும் என வேண்டினார்...!! இறைவனும் அங்கு தோன்றி பக்தா பழனி நீ காப்பாற்றப்பட்டாய் மரக்கிளையிலிருந்து உன் கைகளை விடு என்றார்...!! என்ன கைகளை விடுவதா தாங்கள் என்னை பிடித்து கொள்ளா விட்டால் நான் கைகளை விடமுடியாது என்றான் பழனி...!! இறைவன் சொன்னார் என்னை நம்பி கையை விடு இல்லையென்றால் நான் போய் விடுவேன் பழனி சொன்னார் நான் உங்களை நம்புவதாக இல்லை விடிந்தவுடன் நான் பார்த்து இறங்கிக் கொள்கிறேன் நீங்கள் செல்லலாம்...!! இறைவன் சென்றுவிட்டார் பழனி விடிய விடிய கை வலிக்க மரக்கிளையைப் பற்றி தொங்கிக் கொண்டிருந்தார்...!! விடிந்தபிறகு பார்த்தால் அவருடைய கால்களுக்கு கீழ் ஒரு அடி தூரத்தில் சமதளத்தில் தரை இருந்தது பழனி தன் அறியாமையையும் நம்பிக்கையின்மையும் எண்ணி வெட்கி தலை குனிந்தார்...!! குறிப்பு : இக்கதை கடவுள் நம்பிக்கையை மட்டும் வளர்க்க அல்ல ஒருவரை நம்பினால் முழுமையாக நம்ப வேண்டும் என்பதை உணர்த்த இந்த பதிவு...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - ननfीकी॰ றைவனை அடைய எண்ணம் சொல் செயல் ஆகியவற்றில் வேறுபாடு ன்றாக நல்லதாக ன்றி ரே நேர்கோடாய் ருப்பின் மூன்றும் செயல்பட்டு எளிதாய் றை காணலாம் சொல் செயல் எ்ளம் ல்லாவிடில் கோணல் புத்தியால் கோணங்கள் ஏற்பட்டு மூன்றும் கோமாய் செயல்பட் முக் வாழ்வு முடிந்துவிடும் பேராசை 1 ? சயறல மனிதன் பெருமை ஆடம்பரம் செயல் Sudarsan Sudarsan ननfीकी॰ றைவனை அடைய எண்ணம் சொல் செயல் ஆகியவற்றில் வேறுபாடு ன்றாக நல்லதாக ன்றி ரே நேர்கோடாய் ருப்பின் மூன்றும் செயல்பட்டு எளிதாய் றை காணலாம் சொல் செயல் எ்ளம் ல்லாவிடில் கோணல் புத்தியால் கோணங்கள் ஏற்பட்டு மூன்றும் கோமாய் செயல்பட் முக் வாழ்வு முடிந்துவிடும் பேராசை 1 ? சயறல மனிதன் பெருமை ஆடம்பரம் செயல் Sudarsan Sudarsan - ShareChat