#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️
இளைஞர்களே கவனம்!
வன்முறையின் மறுபெயர் ஆர்.எஸ். எஸ் என்று தமிழ்நாடு உணர்ந்த காரணத்தினால்தான் சங்கபரிவார் கூட்டங்களை எப்படியும் இங்கே காலூன்ற விடக்கூடாது எனும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேரடியாக காலூன்ற முடியாமல் முட்டி மோதி ஜாதியம், மதம் என்று கலவரத்தை முன் நின்று நடத்த நினைத்தவர்கள் அரசியலில் பலரை களம் இறக்கினார்கள். வந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு அரசியலில் இருந்து தமிழ்நாட்டு மக்களாலேயே அப்புறப்படுத்தப் பட்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ் என்ற சமூகத் தொற்று ஆதவ் அர்ஜுனா என்ற பெயரில் வந்ததை பலர் எச்சரித்தனர். தனிமனித வெறுப்பு வரை தூண்டி விட்டு ஒன்றாக நின்றவர்களை எல்லாம் மோதவிட்டு ரசித்த நபர் இன்று வெளிப்படையாக தனது கலவர மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். அருமை ரசிகர்களே ! இளைஞர்களே! உங்கள் சிந்தனைக்கே சில கேள்விகளை விட்டுவிடுகிறோம்.
1. கரூரில் மறைந்த மக்களை இதுவரை ஆதவ் சந்தித்தாரா?
2. அவர்கள் இறந்த தகவல் தெரிந்து அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினாரா?
3. அனைத்துக்கும் ஊடகம் முன்னால் பேனாவுடன் வருவபவர் இப்போது எங்கே இருக்கிறார்?
4. அவர் ஏன் வர வேண்டும்? என்று மெத்த அறிவோடு நீங்கள் கேட்பீர்கள், இறந்த போனவர்கள் திமுக, அதிமுக, விசிக அல்ல தவெக.
5. விஜய்யிடம் குழந்தை காணோம், சிலர் மயக்கம் என்று கூறிய ஆதவ் ஏன் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுக்கு என்னாயிற்று என்று பார்ப்பதற்கு கூட கரூரில் தங்கவில்லை?
6. சாலையில் நடந்தபோது எப்போது தடியடி நடந்தது?
7. ஆளுங்கட்சி சதி என்று அடிப்படை புரிதலற்று, பொய் செய்திகளை பரப்பினால் சமூக அமைதி சீர்குலையும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் கைது செய்வது சட்டத்தின் கடமை.
8. எங்கள் ஆட்கள் பொய் சொல்லவில்லை இதோ பிடியுங்கள் ஆதாரங்களை என்றாவது ஆதவ் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் நின்று இருக்க வேண்டாமா?
9. விஜய் கரூர் வரமாட்டார் கூட்டம் கூடிவிடும் என்று நீங்கள் சொன்னபடி வைத்துக் கொள்வோம்; ஆதவ் வந்து உங்களுடன் நிற்பதில் என்ன சிக்கல்? ஒரே ஒரு சிக்கல் தான் அவரின் நிஜ உருவம் அனைவரிடமும் அம்பலப்பட்டுவிடும்.
10. நேற்று இரவு உங்களை தூண்டிவிட பதிவிட்டு, அவர் தனது பதிவை உடனடியாக ஏன் அழித்தார்?
இறுதியாக, தயாரா இருங்க என்று பதிவிடும் இளைஞர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களை முன் நிறுத்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்யத்தான் ஆதவ் போன்றவர்கள் தயாராக இருப்பார்களே தவிர, அவர்கள் முன் நின்று உங்களை காக்க தயாராக இல்லை.
சதி கதைகள் பின்னும் முன்பு, உங்களை சுற்றி ஆதவ் போன்றவர்கள் பின்னிக் கொண்டிருக்கும் சதியை புரிந்துக் கொள்ளுங்கள்.
பி. கு: நீண்ட பதிவை வாசிக்கும் அளவிற்கு பொறுமை அங்குள்ள இளைஞர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை, புரிதலுள்ள யாரேனும் உடனிருப்பின் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.