ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையில் பல மறைக்கப்பட்ட அத்தியாயங்கள் உள்ளன. ஆனால், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைச்ராய் லார்டு மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டனுடன் நேருவின் நெருக்கம் மீண்டும் ஒருமுறை அரசியல் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏன் இந்த சர்ச்சை?
நேரு – எட்வினா இருவரின் உறவின் தன்மை காரணமா? அல்லது அத்தகைய உறவு இருந்ததே இல்லை என்று சிலர் மறுப்பதாலா? எதுவாக இருந்தாலும், பல ஆண்டுகளாக வெளியான கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த தொடர்பின் குறித்து வேறு கதைகளை சொல்கின்றன.. ஆகவே, இதுவரை திறம்பட பேசப்படாத நேரு-எட்வினா உறவைப் பற்றிய உண்மையைப் பார்க்கலாம்…
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைச்ராய் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் 1947 மார்ச் மாதத்தின் கோடைகாலத்தில் இந்தியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. அப்போது இந்திய துணைக் கண்டம் பல நெருக்கடியை எதிர்கொண்டு கொண்டு இருந்தது. மத, அரசியல் குழப்பங்களுக்கு நடுவில் அதிகார மாற்றத்தை அமைதியாகவும் சீராகவும் நிறைவேற்றுவது வைஸ்ராயின் முக்கிய பணி.
ஆனால், வரலாறு திருப்புமுனை எடுக்கின்ற அந்த நேரத்தில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில், ஒரு தனிப்பட்ட மற்றும் நெருக்கமான சம்பவம் உருவாகத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அது வரலாற்றுப் பின்னணியில் மலர்ந்த மிகவும் தனிப்பட்ட, உணர்ச்சி வளமான ஒரு பந்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.. இந்தியாவின் எதிர்கால பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் நெகிழ்வான, கலாசார நயத்துடன் விளங்கிய எட்வினா மவுண்ட்பேட்டன் ஆகியோருக்கிடையேயான ஆழமான நெருக்கம்.
எட்வினா பெரும்பாலும் பிறருடன் அதிகம் பேசாதவராக இருந்தார். ஆனால் நேருவிடம் நம்பிக்கை தரும் ஒருவரையும், உணர்ச்சிப் பகிர்விற்கான தோழனையும் அவர் கண்டதாக பல வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அவர்களின் இந்த நெருக்கமான பந்தம், அந்நாளில் மட்டுமல்லாமல் இன்றும் கூட ஆர்வத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்துகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பத்தாண்டுகள் கடந்த பின்பும், இந்த உறவு குறித்த கதைகள், கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் வரலாற்றாசிரியர்களும் வாசகர்களும் தொடர்ந்து ஆராயும் ஒரு தலைப்பாகவே உள்ளது.
பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் அறிக்கைகள் படி, ஜவஹர்லால் நேரு மற்றும் எட்வினா மவுண்ட்பேட்டன் இடையேயான உறவு அரசியல் எல்லைகளைத் தாண்டிய ஒரு ஆழமான நெருக்கமாக வளர்ந்ததாக கூறப்படுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும், இந்த தொடர்பு பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தது.
நேரு, எட்வினா அவள் இறக்கும் வரை கடிதங்கள் எழுதினார் என்று தகவகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கிடையேயான இந்த நெருக்கத்தை லார்ட் மவுண்ட்பேட்டன் அவர்களே அறிந்திருந்தார் என்றும் பல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
சில வரலாற்றுச் சான்றுகள் படி, நேரு இங்கிலாந்திற்குச் சென்று, ஹாம்ப்ஷயரில் உள்ள மவுண்ட்பேட்டன் இல்லத்தில் விருந்தினராக தங்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புகள், அவர்களுக்கிடையேயான தனிப்பட்ட பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது என்பதே பல ஆய்வாளர்களின் கருத்து.
இத்தகைய சம்பவங்கள் காரணமாக, நேரு-எட்வினா உறவு இன்று வரைக்கும் வரலாற்றில் விவாதமும் ஆர்வமும் கிளப்பும் தலைப்பாக உள்ளது. எட்வினாவின் மகள் பமேலா ஹிக்ஸ், தனது நினைவுக் குறிப்பான Daughter of Empire: Life as a Mountbatten நூலில், இந்த உறவைப் பற்றி மிகவும் நெருக்கமான மற்றும் வெளிப்படையான விவரங்களை பகிர்ந்துள்ளார்.
"1947-ஆம் ஆண்டு மவுண்ட்பேட்டன் தம்பதிகள் இந்தியா வந்தபோது தன் தாய் எட்வினா மற்றும் ஜவஹர்லால் நேரு இடையே ஒரு “ஆழமான உறவு” (profound relationship) உருவானது.. " என்று பமேலா குறிப்பிடுகிறார்.
ஆனால், இதே நேரத்தில் பமேலா மிகத் தெளிவாக ஒரு விஷயத்தையும் விளக்கி உள்ளார்.. "அவர்களுக்கு ஒருபோதும் உடலுறவு அல்லது உடல்நிலை தொடர்பான உறவு எதுவும் இல்லை" என்று பமேலா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இருவருக்கும் இடையில் இருந்த பந்தம் மிகுந்த நெருக்கம், மதிப்பு மற்றும் உணர்ச்சி சார்ந்த இணைப்புக்குரியது மட்டுமே என பமேலா வலியுறுத்தி உள்ளார்…
இந்திய அரசிற்கு அதிகாரம் மாற்றப்பட்ட பின் எட்வினா மவுண்ட்பேட்டன் இந்தியாவை விட்டு செல்லத் தயாரானபோது, ஜவஹர்லால் நேருவுக்கு ஒரு பச்சை மரகத மோதிரத்தை நினைவாக வழங்க விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், நேரு இப்படிப்பட்ட தனிப்பட்ட பரிசை ஒருபோதும் ஏற்க மாட்டார் என்பதை உணர்ந்த எட்வினா, அந்த மோதிரத்தை நேரின் மகள் இந்திரா காந்திக்கு ஒப்படைத்தார்.
எட்வினா மீண்டும் பிரிட்டனுக்கு திரும்பிச் சென்ற பின்னரும், அவர்களுக்கிடையிலான பந்தம் குறையவில்லை.. இருவரும் தொடர்ந்து கடிதங்கள் மூலம் தொடர்பில் இருந்தனர். அந்த கடிதங்கள், இவ்விருவரின் வெளிப்படையாகப் பேசப்படாத ஆழமான உறவுக்கான எழுத்து வடிவச் சாட்சியாக பல வருஷங்கள் நீடித்தன.
வரலாற்றின் ஓரங்களில் அமைதியாக மறைந்து கிடக்கும் இந்த உண்மை, நேரு மற்றும் எட்வினாவின் உறவு எவ்வளவு நுட்பமான, உணர்ச்சிப்பூர்வமான, ஆனால் எல்லைகளை மதித்த ஒன்றாக இருந்தது என்பதை காட்டுகிறது.
ஜவஹர்லால் நேரு மற்றும் எட்வினா மவுண்ட்பேட்டன் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட தனிப்பட்ட கடிதங்கள் இன்று வரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படவில்லை. இந்தக் கடிதங்கள் 1971ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் "பாதுகாப்புக்காக" பிரதமர் நினைவகம் நூலகத்துக்கு (Prime Minister's Memorial Library - PMML) ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது; அவை அரசிற்கான நிரந்தர பரிசாக வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர்களின் கடிதங்கள் இன்னும் பூட்டிய பெட்டிகளில் உறங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப் பிணைப்பின் மர்மம் இந்திய வரலாற்றின் மிகவும் கவர்ச்சிகரமான அத்தியாயங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. #😍 சிறுவயது நினைவுகள் 😍 #🖌️நேரு ஸ்கெட்ச் #💌 என் காதல் கடிதம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖


