#magill vithu magill. மகிழ்
என் உண்மை முகத்தை உங்களிடம் மறைத்து வைத்திருக்கும் வரையில் தான் நான் நல்லவன்....🤍✨
பலருக்கும் இரு முகங்கள்
உண்டு...💢💥
இது என்னையும் சேர்த்து
பலருக்கும் பொருந்தும்...
ஒரு தவறான செயலை இயற்கைக்கு மாறாக சகஉயிர் தீங்கு விளைவிக்கும் வகையில் செய்யும் வாய்ப்புஇருந்தும்செய்யாமல் இருப்பதும்ஒரு தர்மமே
மழை பெய்யறதுன்னா
குடை எடுத்துக்கோ
இல்ல ரெயின் கோட்
போட்டுக்கோ
இது என்ன சிறு பிள்ளைதனமா
மலைய தூக்கிக்கிற.
குன்றை குடையாய்
எடுத்தாய்.எழில் போற்றி.
இந்த உலகில்
உதிரும் மயிராக இருந்தாலும்,
உதிரத்தில் பிறக்கும் உயிராக இருந்தாலும்…
அவை இருக்கும் போது
அவற்றின் மதிப்பை உணராமல் விடுகிறோம்…
ஆனால், இல்லாதபோது
அவற்றின் அருமையை உணர்ந்து
மனம் கனக்கும், வருத்தம் பெருகும்…
அதனால் , இருக்கும் போதே
அவற்றை போற்றிக் காப்போம்,
அவற்றின் அருமையை உணர்ந்து வாழ்வோம்,
நன்றி உணர்வை நெஞ்சில் நிறைவோம்.
ஏனெனில்
இருப்பின் மீது செய்யும் கவனம்
வருத்தத்தின் கதவை மூடிவிடும்
*🚩பகவத்கீதை🚩*
*கட்டுப்படாத மனதைக் கொண்டவனுக்கு தன்னை உணர்தல் கடினமானச் செயலாகும். ஆனால் மனதைக்*
*கட்டுப்படுத்தி, சரியான வழியில் முயல்பவனுக்கு வெற்றி நிச்சயம். இதுவே என் அபிப்பிராயம்*.
கொண்டாடப்படும்
உறவுகள் கூட
வேண்டாம்...
உணர்வுகளை புரிந்து கொள்ளும் உறவுகள் இருந்தாலே போதும்...!!!
தேவையில்லாத கேள்விக்கு தெளிவான விடை மௌனம் மட்டுமே...!
எந்த சூழ்நிலையிலும் சிறந்த பதில் புன்னகை மட்டுமே...❤️🥰
- *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩* *
#ஶ்ரீமத்பகவத்கீதை🙏
11. #விஷ்வரூபதரிசன_யோகம்.🙏
பாகம்__2
( பகவானின் விஷ்ரூபதரிசனத்தைக் காணும் பேற்றை #அர்ஜுனன் பெற்றதைப் போல இந்த அத்தியாயத்தை விரும்பிப் படிக்கும் அனைவருக்கும் பகவானின் தரிசனம் மானசீகமாகக் கிடைக்கும். கீதையைப் படிப்போர் பெறற்கரிய பேற்றை பெற்றவர்களாவர். அதன்படி நடக்க முயற்சித்தாலோ, பகவானையே அடையலாம். கீதையின் மிக முக்கியமான பகுதியான இதை ஈடுபாட்டோடு படித்துப் பகவானின் அருளைப் பெறுவோமாக.)
சொன்ன வார்த்தைகள் ஓவ்வொரு வார்த்தைகள் உன் திரும்ப வரும்போது தெரியும் செய்த பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் எத்தனையோ சகாப்தம் இல்லாமல் போகும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும்
🙏4. "இறைவா! அதைப் பார்க்க எனக்கு இயலும்! என்று நினைத்தீர்கள் என்றால், யோகேஸ்வரா! உமது அழிவற்ற உருவத்தைக் காட்டியருள்க".🙏
விளக்கம்: : அர்ஜுனன், பகவானிடம், தங்களது விஷ்வரூபத்தைக் காட்டியருளுமாறு கேட்கிறான். யோகத்திற்கும், யோகிகளுக்கும் தலைவனே யோகேஸ்வரன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களுக்கும் தலைவன், இறைவன்.
ஈசுவரனுடைய விஷ்வரூபத்தைக் காணவேண்டுமென்பது பார்த்தனின் விருப்பம். ஞான தரிசனத்தைத் தந்தருள யோகேஸ்வரனுக்கே இயலும். தன்னுடைய விருப்பத்திற்கு முக்கியம் தராது நான், தங்களது விஷ்வரூபத்தைக் காணத் தகுதியுடையவன்! என்றால், அதைக் காட்டியருளுங்கள் யோகேஸ்வரா! என்கிறான் அர்ஜுனன்.
#ஶ்ரீபகவான்_கூறியது: 🙏
🙏5. " பலவகைப்பட்ட , பல நிறங்களும், வடிவங்களும் உடைய ,எனது தெய்வீக உருவங்களை நூறு, நூறாக, ஆயிரம், ஆயிரமாக இனிப் பார் பார்த்தா".🙏
விளக்கம்: தெய்வத்தோடு தொடர்புடையவைகள், உண்மையில் தெய்வத்தன்மையை உடையவைகளே. ஆகையால் அவைகள் திவ்வியமானவைகள் எனப்படுகின்றன. பரம்பொருளின் வடிவங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. எனவே எனது பலவகைப்பட்ட , பலவேறு வகையான தெய்வ வடிவங்களை ஆயிரமாயிரமாக இனி நீ காணலாம்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா.
#இராமகிருஷ்ண_பரமஹம்சரின்___________உபதேசம்:
"ஒவ்வொரு பொருளும் நாராயணனே. மனிதனும், நாராயணன்; உயிரினங்கள் அனைத்தும், நாராயணன்; ரிஷியும் நாராயணன்; பொல்லாதவனும் நாராயணனே. உலகில் உள்ள யாவும் நாராயணனே. நாராயணனே பலவிதமான திருவிளையாடல்களைச் செய்தருளுகிறான். எல்லா பொருட்களும் அவனுடைய பல்வேறு உருவங்களாகவும், அவனது பிரபாவத்தின் தோற்றங்களாகவும் இருக்கின்றன".
_ #பரமஹம்சர்.
#அர்ஜுனனுக்கு_ஞானக்கண்_
கொடுத்து தனது விஷ்வரூபத்தை இனி பகவான் காட்டியருளப் போகிறார்.
#.


