🌲புரட்டாசி ஸ்பெஷல் 28🌲
*********************************
🌹நாலாயிர திவ்ய பிரபந்தம்
************************************
♦️திருப்பாணாழ்வார், ஒவ்வொரு பாசுரத்திலும் பெருமானின் ஓர் அங்கத்தின் அழகை வருணிக்கிறார்
🌹🌹மற்றொன்றைக் காணாத கண்கள்
🚩கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
🌹விளக்கம்:
🔹நீலமேக வண்ணன், ஆயர்குலத்தில் பிறந்த வெண்ணையுண்ட வாயன், அவன் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டான்.
🔹அண்டங்களுக்கெல்லாம் தலைவனான அவன் திருவரங்கத்தில் அழகாகக் கண்வளர்பவன்.
🔹உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம் போன்ற அவனைக் கண்டு சேவித்த கண்கள் வேறெதையும் சேவிக்குமா?
🔹ஆரா அமுதனான அவனுடைய அழகைக் கண்டு களித்த கண்கள் வேறு எதையும் கண்டு களிக்குமா? கண்டு களிக்கவும் பாணர் விரும்பவில்லை.
🌹மற்ற ஆழ்வார்கள் தங்கள் ஊரையும் பெயரை யும் (முத்திரை) பாசுரக்கணக்கை யும் கூறியது போல இவர் தம் பெயரை யோ ஊரையோ குறிப்பிடவில்லை.
'உற்றாரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர் வேண்டேன்' என்ற மனோபாவம்!
🌹அவருடைய கண்ணும் கருத்தும் அரங்கனி ட மே, அவன் அழகிலேயே ஈடுபட்டன. அவர் தன்னை மறந்தார். இத்தனை காலமாகக் கோயிலுக்குள்ளே வந்து தரிசிக்க முடியாமல் இருந்ததால் இன்று அரங்கநாதனை மிக அருகிலிரு ந்து தரிசித்த ஆனந்தக்களிப்பில் தன்னை யே இழந்தார். தன் நாமமும் கெட்டார், தலைப்பட்டார் தலைவன் தாள்.
🌹‘அரங்கநாதா, உன்னைக் கண்ணாரக் கண்ட பின், உன்னைக் கண்ட கண்கள் வேறு எதை யும் பார்க்க விரும்புமா?’ என் று கேட்டவுடன் அரங்கன் திருப்பாணாழ் வாரைத் தன் மேனியோடு சேர்த்துக் கொண்டார்.
🌹காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல, காய்ந்த இரும்பில் விழுந்த நீர் போல ஆழ்வார் அரங்கனோடு ஐக்கியமானார். அமுதமே கிடைத்தபின் பால் எதற்கு?
🌹ஓம் நமோ நாராயணாய... ஸ்ரீ ரெங்கா...
🌹14.10.2025... நேசமுடன் விஜயராகவன்.... #🙏லக்ஷ்மி- குபேர பூஜை🌟 #📸பக்தி படம் #🙏பெருமாள் #📖 நவராத்திரியின் புராணக் கதைகள் 🌺 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
![🙏லக்ஷ்மி- குபேர பூஜை🌟 - நமோறாரணபண்் @0 செல்லும்திசைமாறி சென்றுவிடும் விஜயராகவன் கப்பலென அல்லும் பகலுமென் ள்ளத்தைகொல்லும் அலைகிட ][|| 0 அவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா ஒல்லும் வழிவல்லாம் விஜயராகவன் னைவணங்கச்செய்திடுவாய் நமோறாரணபண்் @0 செல்லும்திசைமாறி சென்றுவிடும் விஜயராகவன் கப்பலென அல்லும் பகலுமென் ள்ளத்தைகொல்லும் அலைகிட ][|| 0 அவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா ஒல்லும் வழிவல்லாம் விஜயராகவன் னைவணங்கச்செய்திடுவாய் - ShareChat 🙏லக்ஷ்மி- குபேர பூஜை🌟 - நமோறாரணபண்் @0 செல்லும்திசைமாறி சென்றுவிடும் விஜயராகவன் கப்பலென அல்லும் பகலுமென் ள்ளத்தைகொல்லும் அலைகிட ][|| 0 அவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா ஒல்லும் வழிவல்லாம் விஜயராகவன் னைவணங்கச்செய்திடுவாய் நமோறாரணபண்் @0 செல்லும்திசைமாறி சென்றுவிடும் விஜயராகவன் கப்பலென அல்லும் பகலுமென் ள்ளத்தைகொல்லும் அலைகிட ][|| 0 அவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா ஒல்லும் வழிவல்லாம் விஜயராகவன் னைவணங்கச்செய்திடுவாய் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_950984_1cfeae85_1760502949034_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=034_sc.jpg)

