ShareChat
click to see wallet page
search
“மல்லிகை என் மன்னன் மயங்கும்” வாணி ஜெயராம் ஏற்கனவே எஸ் எம் சுப்பையா நாயுடுவால் தமிழ் திரைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அவர் எம்.எஸ்.வி இசையில் பாடிய இந்த பாடல்தான் அவரின் புகழை சிகரம் தொட வைத்தது. மல்லிகையின் நறுமணத்தை மெல்லிசையில் உணரச் செய்யும் மெட்டு. கோபத்தில் இருக்கும் கணவன் இப்பாடலினூடே கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்வான மனநிலைக்கு வருவான். புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவும், முத்துராமனும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். பல்லவியில் பாங்கோஸும் சரணத்தில் தபலாவும் அருமையாக பயன்படுத்தப் பட்டிருக்கும். பாடலின் சரணத்தில், ‘வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது’ என்ற இடத்தில் தபேலாவின் தாளக்கட்டு கிறக்கம் கொள்ள வைக்கும். “குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம் தான் கையோடு நான் அள்ளவோ” என்று வாணி ஜெயராம் பாடும்போது நாமும் சற்று மயங்கித்தான் போகிறோம். வாலியின் சங்கத் தமிழை ஒத்த வரிகளுக்கு தன் இனிய மெட்டாலும் பின்னணி இசையாலும் நறுமண தைலம் பூசியிருப்பார் மெல்லிசை மன்னர். ——————— படம்: தீர்க்க சுமங்கலி (1974) இசை: M S விஸ்வனாதன் குரல்: வாணி ஜெயராம் வரிகள்: வாலி #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬 சினிமா - ShareChat
01:30