அடுப்பு எரிக்க உடைக்கப்படும் விறகை அடுப்புக்கு ஏற்றார்போல உடைத்தெடுப்பதைப்போல
அதிமுகவை பாஜக உடைத்தெடுத்தாகிவிட்டது.
சரி இப்படி எல்லாம் செய்யும் பாஜக ஆட்சிக்கு வந்து விடுமா என்றால் அதுதான் இல்லை.
இப்போது பாஜக ஆட்சிக்கு வருவதை பாஜகவே விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது நம்மைவிட பாஜக நன்றாக அறிந்து வைத்துள்ளது .
தங்களின் ஆன்மீக அரசியல் வியாபாரத்துக்குத் தடையாக இருக்கும் திமுகவை வீழ்த்துவது மட்டுமே . பாஜகவின் முக்கிய நோக்கம் .
அதற்காக தான் உருவாக்கிய தவெக வில் யார் யாரை எல்லாம் தவெக உள்ளே அனுப்புவது என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறது.
ஒரு IAS அதிகாரியை ராஜினாமா செய்ய வைத்து அனுப்பியிருக்கிறது .
அதற்கு முன்பு நிர்மல்குமார் எனும் ஆர்எஸ்எஸ் காரனை அனுப்பியது.
அதற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனனை ..
இப்போது அமித்ஷாவின் செல்லப் பிள்ளை செங்கோட்டையன்..
இன்னும் சில அல்லக்கைகளும் அனுப்பட இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன.
சங்கிப் பயலுவதானே
மத வெறி கழுதைகள்தானே
என்று நாம் மிதமாக இருந்துவிட வேண்டாம்.
ஆர்எஸ்எஸ் என்கிற இயக்கத்திற்காக
பெரும் பெரும் தவறுகளை
தேர்தல் ஆணையம் , அமலாக்கத்துறை, சிபிஐ , முக்கிய சில நீதிபதிகளும்
ஒன்றிணைந்து போட்டி போட்டுக் கொண்டு செய்கிறது.
இதை இந்திய உச்சநீதிமன்றம் சொகுசு அறையில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் எழுதிக் கொடுப்பதை வாசித்தால் என்னென்ன பதவிகள் காத்துக் கிடக்கின்றன என்று அதற்காக ஓய்வு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் இதன் Seriousness தெரியாமல் பாஜகவின் ஏற்பாட்டில் கதாகாலட்செபம் செய்து கொண்டு இருக்கின்றன.
இந்த அயோக்கியத்தனங்கள் எல்லாம் நியாயம்தான் என்று 150க்கும் மேற்பட்ட சமூகவிரோதிகளை அறிஞர்கள் போர்வையில் தயார் செய்து அவர்களை கடிதம் வேறு எழுத வைத்திருக்கிறார்கள்.
இதுகண்டு போராட வேண்டிய இளைஞர் சமூகத்தின் ஒரு பகுதியினர் விஜய் எனும் நடிகரின் பின்னால் பைத்தியக்காரர்களைப்போல சுற்றி வர வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு அநியாயங்களை அரங்கேற்றிய பிறகும்
கொதிநிலையில் இருந்திருக்க வேண்டிய இந்திய நாட்ட்டை ஏதாவதோரு குண்டுவெடிப்பு
ஏதாவதொரு பிரச்சனை என திசைதிருப்பல்கள் திட்டமிட்டு பாஜகவால் உருவாக்கப்படுகிறது.
41 உயிர்கள் பறிபோன அந்த குடும்பத்தினர் அதை
“ just like that “ என்பதுபோல கடந்து செல்கின்றனர். இவர்களுக்காக என்னத்தப் பேசுறது என்று மனம் நொந்து பேசிய ஒரு நடிகை திரு. வினோதினியின் விரக்தியான பேச்சை கேட்க நேர்ந்தது .
மனம் கணக்கிறது .
இந்த நேரம் காசு பணத்திற்காக ஓடும் நேரமல்ல.
ஒரு காலத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த அறிஞர் பெருமக்கள் பலர் நாட்டின் நலன் கருதியும் , இளைஞர்களின் எதிர்காலம் கருதியும் திமுகவை நிபந்தனை இன்றி ஆதரித்து வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.
கவலை
கவலை
மிகுந்த கவலையாக இருக்கிறது.
எங்காவது
எவராவது
பூனைக்கு மணி கட்டித்தான் ஆக வேண்டும் .
அது தமிழ்நாடா
மேற்குவங்கமா..?
ஆ. சிங்கராயர்
திராவிட நட்புக் கழகம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை . #👨மோடி அரசாங்கம்


