ShareChat
click to see wallet page
search
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #புரட்டாசி *புரட்டாசி மாதம் 29ம் நாள் 15-அக்டோபர்-25 நவமி* *திதி கூடிய* *புதன் கிழமை* புண்ணியம் அருளும் புரட்டாசி பெருமாள் திருமாலை போற்றி வணங்கிடுவோம் வாரீர் பிரளய காலத்தில் ஆலமா மரத்தின் இலைமேல் தன்னந்தனியே சின்னஞ் சிறு பாலகனாய் பள்ளிகொண்டவனே பெருமாளே ஈரேழு உலகங்களையும் உண்டு தன் திருவயிற்றிலே அடக்கியவா, பாற்கடலில் அரவ படுக்கையில் துயில்பவனே பெருமாளே ஈடு சொல்லமுடியாத நீலமேனி அழகும், இரத்தின ஆரமும், முத்து மாலை யும், காண மனம் கொள்ளை போகிறதே பெருமாளே மிக கோபம் ஆணவத்தோடு எதிர்த்து வந்த இரணியனின் குடலைத் தன் நகங்களால் கிழித்த நரசிங்க பெருமாளே முகத்து கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்பெரிய கண்கள் எம்மை பேதமை செய்தனவே பெருமாளே சுழியை உடைய சங்கு, அனல் கக்கும் சக்கரம் தனது கரங்களில் ஏந்தி பச்சை மாமலை போல் காட்சி தருபவனே பெருமாளே இன்னமுதர், குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர், என பேரழகு கொண்ட பெருமாளே சௌம்ய வார புதன் கிழமையில் சௌம்ய நாராயண ரூபமாக காட்சி தரும் உனை பணிந்து நிற்கும் எனை ரக்ஷ் பெருமாளே 🪷🪷🪷
பத்திஸ்டேட்ஸ் - ٠ادف ٠ادف - ShareChat