#magill vithu magill. மகிழ்
நமக்குள்ளும் நமக்கு வெளியேயும் உள்ள அனைத்தும் - நம் உறவுகள், நம் எண்ணங்கள், நம் உணர்வுகள் - நிலையற்ற இயக்கத்தில் உள்ளது. இதைப் பார்க்கும் மனம், நிரந்தரத்தை விரும்புகிறது.
செய்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது
சொன்ன வார்த்தைகள் செய்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
நிரந்தர அமைதி, நிரந்தர அன்பு, நிரந்தர நன்மை. காலமோ நிகழ்வுகளோ அழிக்க முடியாத ஒரு பாதுகாப்பு நிலையை மனம் நாடுகிறது.
எனவே அது ஆன்மா, சொர்க்கம், கடவுள் போன்றவற்றை உருவாக்குகிறது.
ஆனால் இந்த நிரந்தரத்தன்மை, நிரந்தரமற்ற நிலையை கண்டு அஞ்சுகிற ஒரு மனதிலிருந்து பிறக்கிறது. அதனால் அந்த நிரந்தரத்தன்மையில், நிரந்தரமற்றதின் விதைகள் உள்ளன.
ஒரே ஒரு நிலைதான் உண்மை.
நிலையற்ற தன்மை.
யார் நம்மோடு
இருக்கிறார்கள் !
யார் நம்மோடு
இல்லை !
இதையெல்லாம்
யோசித்து உங்கள்
வாழ்க்கையை
தொலைத்து விடார்தீர்கள்,
உன் வாழ்வை முதலில்
பார் ...நாம
"அதிகமா"
பேச பார்க்க
"ஆசைப்படுவது"
அநேகமாக நமது "உணர்வுகளை" புரிந்தவர்களாகவே
இருக்க ஆசைப்படுகிறோம்...
🚩 #பகவத்கீதை 🚩
🚩அத்தியாயம்:0️⃣3️⃣பதம்:1️⃣5️⃣
🕉️ விதிக்கப்பட்ட கடமைகள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. வேதங்கள் நேரடியாக முழுமுதற் கடவுளிடமிருந்து தோன்றியவை. எனவே, எங்கும் பரவியுள்ள முழுமுதற் கடவுள், எல்லா யாகங்களிலும் நித்தியமாக வீற்றுள்ளார்...
-#பகவான்_ஸ்ரீ_கிருஷ்ணர்
#ஶ்ரீமத்பகவத்கீதை 🙏
9. #ராஜவித்யா_ராஜகுஹ்ய_யோகம்
பாகம்__13
🙏18." புகலிடம், வளர்ப்பவன்,
உடையவன், சாட்சி, இருப்பிடம், அடைக்கலம், தோழன், பிறப்பிடம், ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம், அழியாத வித்து".🙏
விளக்கம்: செய்த கர்மத்துக்கு ஏற்றவாறு அமைவிடம் அல்லது "புகலிடம்" கதி எனப்படுகிறது. கர்மம் ஓய்ந்த இடத்தில் பகவானைத் தவிர "புகலிடம் பிறிது ஒன்றில்லை". உணவு முதலியன கொடுத்து வளர்ப்பவன் "பர்த்தா".( வளர்ப்பவன்). "ப்ரபு" (*பிரபு) என்பதற்குச் *சுவாமி, *தலைவன், *இறைவன், * உடையவன் என்று பொருள். உயிர்வகைகள் தத்தம் கடமைகளை முறையாக செய்வதற்கும், செய்வதற்கும் சாட்சி அல்லது பார்த்திருப்வராக உள்ளார் பகவான்.
நிவாஸ: என்றால் உயிர்கள் வசிக்கும் இடம், இருப்பிடம் என்று பொருள்படுகிறது. சரணம் என்றால் "தன்னை தஞ்சமடைந்தவர்களது துக்கத்தைத் துடைப்பவன்" அல்லது "அடைக்கலம்" என்பதாகும். "ஸுஹ்ருத்" என்பதற்குக் "கைமாறு கருதாது நன்மை செய்பவன்", "தோழன்" என்று பொருள்.
நிதானமாவது எதிர்காலத்தில் உயிர்வகைகள் அனுபவிப்பதற்குச் சேகரித்து வைத்துள்ள "களஞ்சியம்". பூமியில் நட்ட வித்து அழிந்து செடியாக மாறுகிறது. ஆனால் #பிரம்மம் என்கிற "வித்து"(*பீஜம்) எவ்விதமான மாறுதலையும் அடையாதவாறு இருந்துகொண்டே _ உயிர், பிரபஞ்ச
(ஜீவ, ஜகத் ) வகைகளைத் தன்னிடத்திலிருந்து தோன்றிவர இடம் கொடுக்கிறது.
எனவே #அர்ஜுனா! உயிர்களுக்குப் புகலிடமாகவும், வளர்ப்பவனாகவும், உடையவனாகவும், அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு சாட்சியாகவும், உயிர்களின் இருப்பிடமாகவும், அடைக்கலமாகவும், கைமாறு கருதாது நன்மையைச் செய்யும் தோழனாகவும்,உயிர்களின் பிறப்பிடமாகவும், ஒடுங்குமிடமாகவும், அவைகள் தங்குமிடமாகவும், களஞ்சியமாகவும், அழியாத வித்தாகவும்(பீஜம்) நானே இருக்கிறேன்! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
யாருக்கும் கெட்டது நினைக்காம...
யாருக்கும் துரோகம்
செய்யாம...
வாழ்றவங்க கொஞ்சம்
திமிரா😎
கெத்தா
இருக்குறதுல ஒன்னும் தப்பில்ல...!!
❤️🔥
🙏19. அர்ஜுனா! நான் வெப்பம் தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும், தடுக்கவும் செய்கிறேன் ஸத்தும், அஸத்தும் நானே". 🙏
விளக்கம்: பகவான், சூரியனைக் கொண்டு பகவான் வெப்பத்தை உண்டு பண்ணுகிறார். சூரிய கிரகணத்தால் மழை பெய்யவும், நிற்கவும் செய்விக்கிறார். அவரவர் கர்மபலனுக்கு ஏற்றாற்போன்று தேவர்கள் சாகாமையும், மனிதர்கள். சாவையும் பெறுகின்றனர்.
*சாகாமை, *சாவு ஆகிய இரண்டும்
சிலவேளைகளில் விருப்பையும், சிலவேளைகளில் வெறுப்பையும். நமக்குத் தருகின்றன.
எனவே #ஜீவனை_ஞானத்திற்குப் #பக்குவப்படுத்துவதற்குத் #தேவர்களுடைய__சாகாமையும், #மனிதர்களுடைய__சாவும் மாறி மாறி பயன்படுகின்றன என்கிறார் ஶ்ரீகிருஷ்ண பகவான்.
மனிதர்கள் கர்மம்( வினைகள்) செய்யப்படுவதால் உயிர்களிடத்து ஏற்படும் தோற்றம். "ஸத்" என்று இங்கே கூறப்படுகிறது. தோன்றா நிலையே "அஸத்" ஆகிறது. அஸத்து என்பது சூனியமல்ல.
( இனி காமிய கருமத்தின் பலன்__
_ போகப் பிரியர்களின் பாங்கு _ ஸ்லோகங்கள்__ 20__21 வரை )
"அர்ஜுனா! நான் வெப்பம் தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும், தடுக்கவும் செய்கிறேன். சாகாமையும், ஸத்தும், அஸத்தும் நானே" என்கிறார்
#ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா. 🙏
#ஶ்ரீகிருஷ்ணா__சரணம். 🙏
__


