ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📢 செப்டம்பர் 18 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ என் எக்சோட அண்ணன் என் பால்ய நண்பன், சிறு வயதில் இருந்தே குடிப்பான் சிறுவயதில் ஏற்பட்ட காதலால் எனக்கும் அவனுக்கும் இருந்த நட்பு முறிந்தது... அவன் கல்யாணத்துக்கு கூட என்னை அழைக்க வில்லை, காரணம் எங்கே நம்ம தங்கச்சியை பழையபடி பார்த்து விடுவானோ என அவளும் வேற கல்யாணம் செய்து போய் விட்டாள், கிட்ட தட்ட 15 வருடங்கள் கழித்து பழைய பகையை மறந்து பழையபடி பேசி நட்பானோம், அப்பவும் அவன் குடி பழக்கத்தை விடவில்லை, கொரோனா காலத்தில் கூட இவனால் கண்ட்ரோல் பண்ணாம இருக்க முடியவில்லை, பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து கொண்டிருப்பான், குவாட்டர் 500, 1000 என்றாலும் பரவாயில்லை என.. ஆட்டோ ஓட்டுவது தவிர வேறு தொழில் தெரியாது, கிடைக்கும் வருமானத்தில் குடிக்கு போக மிச்சம் இருந்தால்தான் வீட்டிற்கு கொடுப்பான்.. இவன் கொடுக்கும் வருமானத்தில்தான் தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு அவன் மனைவி படிக்க வைத்துக் கொண்டிருந்தார்... கொரோனா முடிந்து சிறிது காலத்துக்குப் பின் அவனுக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது... மதுரை ஜி ஹெச் இல் சேர்த்து 3 மாதத்துக்கு மேலாக சிகிச்சை அளித்தார்கள், அந்த சமயம் அவன் குடும்பம் பட்ட பாடு வார்த்தையில் சொல்லி மாளாது.. கல்லீரல் முழுவதுமாக கெட்டுப்போகும் சூழ்நிலையில் உள்ளது, இனி ஒரு சொட்டு மது குடித்தால் கூட உயிர் போய்விடும் என டாக்டர்கள் எச்சரித்து காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பினார்கள்... வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் ஒழுக்கமாக இருந்தான்.. அவனின் மனைவி பக்கத்தில் உள்ள ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று அவனையும் தன் பிள்ளைகளும் காப்பாற்றி வந்தது... இவனும் வீட்டில் சும்மா இருந்து போர் அடிக்கவே, பக்கத்தில் உள்ள பேப்பர் கம்பெனியில் சேர்ந்து டெய்லி 500 ரூபாய் சம்பளம் வாங்கி ஒழுங்காக வீட்டுக்கு கொடுத்து வந்தான்... இவன் வாங்கும் வருமானம் இவனின் மருத்துவ செலவுக்கு சரியாக இருந்தது... சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லை... மீண்டும் குடியைத் தொடர்ந்தான்... இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை.. மீண்டும் மதுரை ஜி ஹெச் இல் அனுமதிக்க, என் காது படவே அவனின் மனைவி பிள்ளைகள் மாமனார் மாமியார் இவன் சீக்கிரம் செத்தால் கூட எங்களுக்கு நல்லதுதான், ஒரு குடிகாரனுக்கு தெரிந்தே என் பிள்ளையை கட்டிக் கொடுத்து என் பிள்ளையின் வாழ்க்கையை நாசமாகி விட்டேனே என அவன் மாமனார் மாமியார் ஆஸ்பத்திரியில் ஒப்பாரி வைக்க, அவனின் மனைவி அமைதியாக அழுது கொண்டிருந்தார், பிள்ளைகள் தாத்தா, பாட்டி அம்மா அழுவதை பார்த்து முகம் வெளிறி போய் நின்றனர் அமைதியாக... ஆஸ்பத்திரியில் சேர்ந்த மூன்றாவது நாளே இறந்து விட்டான்... சிறிது காலம் அந்த குடும்பம் அழுகையும் காட்சியுமாக இருந்தது... இன்று அவனை எல்லோரும் மறந்து விட்டனர்... இதுதான் உலகம்.. இருக்கும் வரை தன் மனைவி பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்க கூட வேண்டாம்... குடிப்பழக்கம் இல்லாத ஒரு சராசரி ஆண் மகனாக தன் மனைவி பிள்ளைகள் மீது உண்மையான பாசத்தோடு வாழ்ந்தாலே போதும்... நமக்கு அடுத்து வரும் வாரிசுகள் நம்மைப் பற்றி அடுத்த இரண்டு தலைமுறைக்காவது பேசுவார்கள்... இல்லையென்றால் என் நண்பனின் கதிதான்...
🚹உளவியல் சிந்தனை - 19 SEP 25 NEWS TL  ரோபோ சங்கர் 1978-2027 0 பிரியா விடை! நடனமாடி மறைந்த தனது கணவர் ரோபோ சங்கருக்கு நடனமாடி பிரியாவிடை கொடுத்த மனைவி பிரியங்கா சங்கர் 19 SEP 25 NEWS TL  ரோபோ சங்கர் 1978-2027 0 பிரியா விடை! நடனமாடி மறைந்த தனது கணவர் ரோபோ சங்கருக்கு நடனமாடி பிரியாவிடை கொடுத்த மனைவி பிரியங்கா சங்கர் - ShareChat