தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் மழை குறித்த அப்டேட்டுகளை வழங்கி வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இன்று இரவு 8.52 மணிக்கு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முக்கிய பதிவை செய்துள்ளார். அதில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் இரவு முதல் மழை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், '' காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Ex Ditwah) இன்னும் உயிருடன் உள்ளது. இன்று இரவு முதல் நாளை காலை முதல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வு மிகவும் மெதுவாக நடக்கும். இந்த வேளையில் எதுவுமே தெரியாது. மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Ex Ditwah) இன்னும் கடலில் உள்ளது. சென்னையின் தெற்கே கல்பாக்கத்தை நோக்கி நள்ளிரவு முதல் அதிகாலை வரை நகரும். #📺டிசம்பர் 3 முக்கிய தகவல் 📢


