ShareChat
click to see wallet page
search
🌹இனிய சிவனுக்கு அன்பு செய்யாதவரை காணவும் அவரோடு பேசவும் கூடாது என கூறுவது இப்பதிகம்* .அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 * எம்பெருமானை வணங்காதவர்கள் *எம்பெருமானை இழிவாக பேசுபவர்கள் பேய்களே* இதோ இப்பாடல் இது திருமாளிகைத்தேவர் ஒன்பதாவது திருமுறையில் அருளியது இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தி னேற்கு மணங்கொள் சீர்த்தில்லை வாணன் மணவடியார்கள் வண்மைக் குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறல் பிண்டப் பிணங்களைக் காணா கண்: வாய் பேசாது அப்பேய்க ளோடே. அடியார்களை தவிர மற்றவர்களோடு இணங்காத ஈசனாகிய சிவபெருமான் மேல் அன்பு கொண்ட மனமுடையவனான எனக்கு ஓர் உறுதி உண்டு. மங்கலம் தரும் சிறந்த தில்லையம்பலவனுடைய மணம் மிக்க அடியார்களின் வள்ளன்மை போன்ற குணங்களை எடுத்து சொல்லாதவர் வாய் மேன்மையற்ற துவாரம் உள்ள வெறுவாய். அவர்கள் உடல் சுமந்த நடைபிணங்கள். என் கண்கள் அவர்களைக் காணமாட்டா. என் வாய் அப்பெய்களோடு பேசாது என்கிறார் திருமாளிகைத்தேவர். மேற்கண்ட பாடலில் அடியார்களின் பெருமையை பேசாதவர்களை பிணங்கள் என்கிறார் இரண்டாவது பாடலில் மிகவும் அழகாக எம்பெருமானை பற்றி இழிவான சொற்களை பேசும் ஏவலர்களை அவர்களை நான் காணமாட்டேன் அந்த பேய்களோடு பேசமாட்டேன். எம்பெருமானை இழிவாக பேசும் அனைவரும் பேய்கள் என்கிறார். ☘️🌺☘️🌺☘️🌺☘️🌺☘️ எட்டுரு விரவி என்னை ஆண்டவன், ஈண்டு சோதி விட்டிலங் கலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண் ; வாய் பேசாதப் பேய்க ளோடே. *பொருள்* நிலம் நீர் தீ காற்று வானம் கதிரவன் சந்திரன் ஆன்மா எனப்படும் எட்டு உருவங்களில் இணைந்து நின்று என்னை ஆட்கொண்டவன் ஈசன். திரண்ட சோதிமயமாய் ஒளிவிளிட்டு பிரகாசிப்பவன். மலர் மாலை அணிந்தவன். தில்லை பதிக்கு வேந்தன். அவனை சேராத தீயவர்கள், இழிவான சொற்களை பேசும் ஏவலர்கள். கொடிய வார்த்தை பேசி சிவநெறிக்கு புறம்பாக திரிபவர்கள். அவர்களை என் கண்கள் காண மாட்டா. என் வாய் அந்த பேய்களோடு பேசாது என்கிறார் திருமாளிகைத்தேவர். ஆகையால் அடியார்களாகிய நாம் ஈசனை வணங்காதவர்களுடன், ஈசனை நிந்தனை செய்பவர்களோடு பேசவும் கூடாது அவர்கள் பேய்கள் என நினைத்து ஒதுங்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து அல்ல அருளாளர்களின் நெஞ்சுரம். அடியார்களாகிய நமக்கும் அது வேண்டும் பின்பற்ற வேண்டும் 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #ஓம் நமசிவாய #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:59