ShareChat
click to see wallet page
search
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹுலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த பொருள் : இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋
📗குர்ஆன் பொன்மொழிகள் - ShareChat
01:00