உடல் நலத்திற்கான ஒரு ரகசியம்.
*************************************
உடல் நலத்திற்கான வாழ்வியல் முறைகள் பல இருந்தாலும் இந்த எளிய ஒரு முறையை பின்பற்றி பாருங்கள். எந்த ஒரு முறையும் மற்றவர்களுக்கு சொல்வதற்கு முன் நான் செய்து பார்ப்பது வழக்கம். அவ்வாறு நீர் குடிப்பதற்கான ஒரு முறையை கடந்த 15 நாட்களாக பின்பற்றி வருகிறேன். எனக்கு பெரிதாக எந்த பிரச்சனைகளும் இல்லை என்றாலும் உடலில் நல்ல மாற்றங்கள் தெரிந்தது.
நாம் நீர் குடிக்கும் குவளை அல்லது டம்ளர் இதை இடது கையில் எடுத்துக்கொண்டு நீர் எடுக்க வேண்டும். பெரும்பாலும் அனைவரும் வலது கையில்தான் நீரை எடுப்போம். இதை மாற்றி இடது கை மூலம் நீரை மொண்டு எடுக்க வேண்டும். இடது கையில் நீர் உள்ள இந்த குவளையை பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த நீரை அருந்துவதற்கு முன் இடது காலை ஒரு அடி முன்னோக்கி வைக்க வேண்டும். அதாவது வலது காலை விட இடது கால் ஒரு அடி முன்னால் இருக்க வேண்டும் .
இப்போது நீரை சிறிதளவு பருக வேண்டும். உடனே அந்த நீரை விழுங்கி விடாமல் ஒரு மூன்று நொடிகள் வாயில் வைத்திருந்து அதை உமிழ்நீருடன் கலந்து மெதுவாக விளங்க வேண்டும். இவ்வாறு ஒரு டம்ளர் நீரை இரண்டு மூன்று பகுதிகளாக பிரித்து அருந்த வேண்டும். மடமடவென குடிக்க கூடாது. ஒவ்வொரு வாய் நீரையும் சுவைத்த அருந்த வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் நீர் அருந்தும் பொழுது இந்த முறையை மறக்காமல் பின்பற்றி வாருங்கள் ஒரு மூன்று நாட்களுக்குள் உங்கள் உடலில் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் இதை தொடர்ந்து செய்யும் பொழுது மிக நல்ல பலன் கிடைக்கும்.
ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து அவர்களுக்கு கிடைக்கும் பலன் மாறுபடலாம். ஆனால் முன்பை விட உடல் நிலையில் நல்ல மாற்றம் இருக்கும்.
இது மிக எளிய முறையாக தெரியலாம் . ஆனால் செய்யும்பொழுது மிக நல்ல பலன் கிடைக்கிறது . இதை செய்து பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் பலன்களை கமெண்டில் எழுதுங்கள் அல்லது ஒரு தனி பதிவாக எழுதுங்கள்.
இதை முடிந்தவரை பகிருங்கள் மற்றவர்களும் பலன் அடையட்டும்.
நன்றி செந்தில் குமார் #udalnalan #உடல்நலம் #உடல்நலம் #உடல்நலம் வாழ வழிமுறை #உடல்நலம்


