இவர்களா பயங்கரவாதிகளுக்கு எதிரானவர்கள்...?!
🥱🥱🥱
அப்சல் குருவால் அன்று 'பயங்கரவாதி' என்று அடையாளம் காட்டப்பட்ட டிஎஸ்பி தேவிந்தர் சிங், இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளை 5 வெடிகுண்டுகள், 2 AK47 துப்பாக்கிகள் சகிதம் டில்லிக்கு காரில் அழைத்துச்சென்ற போது... செக் போஸ்டில் சோதனைக்கு நின்ற... காஷ்மீர் ஐஜி விஜயகுமார் மூலம்... 2020ல்'கையும் தீவிரவாதமுமாக' பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
ஊடகங்கள் முன்னிலையில்... கைதான இந்த... 'டிஎஸ்பி தேவேந்தர் சிங்கும் ஒரு பயங்கரவாதியாகவே கருதப்படுவார்' என்றார் ஐஜி விஜயகுமார்..!
"பாராளுமன்ற தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளில் ஒருவனை காஷ்மீரில் இருந்து டில்லிக்கு காரில் அழைத்துச்சென்று, அவனுக்கு வாடகை வீடு ஒன்றை டில்லியில் எடுத்துத்தந்து, வாடகை கார் ஒன்றும் ஏற்பாடு செய்து தரச்சொல்லி என்னை போலீஸ் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்து குடும்பத்தை காட்டி கொலை மிரட்டலுக்கு உட்படுத்தி கட்டாயப்படுத்தியதே...டிஎஸ்பி தேவிந்தர் சிங்கும், போலீஸ் அதிகாரி ஷாந்தி சிங்கும்தான்"
---இது அன்று அப்சல் குரு கோர்ட்டில் கூறியது.
ஆனால்... அந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் இந்த 'தேசத்தின் கூட்டு மனசாட்சி' அன்று விசாரிக்கவே இல்லை.
"பொய் சொல்கிறான் அப்சல் குரு" என்று கூறி அந்த குற்றச்சாட்டை அப்படியே மூடிவிட்டது கோர்ட்டு.
2013 ல் அப்சல் குரு தூக்கில் ஏற்பட்டு கொல்லப்பட்ட பின்னர்...
2014 ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசினால்... டிஎஸ்பி தேவிந்தர் சிங்குக்கு மிக உயர்ந்த பட்ச அரசுப்பதக்கம் தந்து 2018.ல் மரியாதை தந்து கவுரவித்தது.
அப்சல் குரு குற்றம் சுமத்திய இன்னொரு போலீசுக்கு பதக்கம் தரவில்லை.
காரணம்...
அந்த இன்னொரு போலீஸ் அதிகாரியான ஷாந்தி சிங் சில வருஷங்கள் கழித்து ஒரு கஸ்டடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
எதற்காக என்றால்...
ஓர் அப்பாவி காஷ்மீரியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக பிடித்துச்சென்று கஸ்டடியில் வைத்து அடித்துத் துன்புறுத்தி டார்ச்சர் செய்யும்போது அவர் இறந்துவிடவே... அப்புறம் அவர் பக்கத்தில் ஒரு துப்பாக்கியை போட்டு, அவரின் சடலம் மீது சுட்டு, "போலீஸ் என்கவுண்டரில் காஷ்மீர் பயங்கரவாதி மரணம்" என்று கூறிவிட்டார்.
ஆனால்,
குடும்பத்தார் புகாரின் பேரில் மனித உரிமை ஆணையம் துணையோடு நடந்த நேர்மையான போலீஸ் விசாரணையில்... அது கொலை தான் என்பது நிரூபணம் ஆகி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருந்தார்.
அந்த ஷாந்தி சிங் சிக்கியது அப்படி என்றால்...
இந்த தேவிந்தர் சிங் சிக்கியது படுகேவலம்.
தேசத்தின் கூட்டுமனசாட்சியால் அநீதி இழைக்கப்பட்டவர்களின் குடும்பத்து பிரார்த்தனை வீண் போகவில்லை என்றே நம்புகிறேன்.
26 ஜனவரி, 2020.. குடியரசு தினம் நெருங்கும் வேளையில் ஏதோ ஒரு மிகப்பெரிய பயங்கரவாத சதி... ஜம்மு காஷ்மீர் காவல் உயர் அதிகாரி ஐ ஜி விஜயகுமார் மூலமாக முறியடிக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறேன்.
ஏனெனில்...
2018 ல் பாஜக ஆட்சியில் உயர்ந்த பட்ச மெடல் வாங்கிய... இந்த டிஎஸ்பி தேவேந்தர் சிங்தான்...
2019 புல்வாமா பயங்கரவாதம் நடந்த சாலை மார்க்க ஏரியாவிற்கு பொறுப்புதாரி..!
அப்போது...
//
காஷ்மீரின் கவர்னர் ஆக இருந்த சத்யபால் மாலிக்,
"புல்வாமா சம்பவத்துக்கு முன் பாதுகாப்பு காரணமாக வீரர்களைக் கொண்டுசெல்ல ஐந்து விமானங்களை CRPF கேட்டது. உள்துறை அமைச்சகமோ (அமைச்சராக இருந்தவர் அமித் ஷா) அதற்கு மறுத்துவிட்டது. இதனால், சாலை மார்க்கமாக வாகனத்தில் வீரர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், சாலையும் பாதுகாக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி.
புல்வாமா சம்பவத்துக்குப் பிறகு பிரதமர் மோடியிடம், `வீரர்களுக்கு விமானங்களை வழங்கியிருந்தால் இது நடந்திருக்காது. நம்முடைய தவறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது' எனக் கூறியபோது, "இதுபற்றி வெளியில் பேசாமல் அமைதியாக இருங்கள்" என்றார்" என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
//
--- ஆனந்த விகடன் : 5 ஆகஸ்டு 2025.
மேலும்...
//The officer said Singh was posted across Kashmir on counter-insurgency duty. “He was DySP DR in Pulwama too,’’ the officer said. “He can open a can of worms once he starts talking”.//
(The Indian Express :13 January 2020)
ஆகவே, விசாரணையில் புல்வாமா பற்றி நிறைய உண்மைகளை தேவேந்தர் சிங் கக்குவார் என்றார் ஒரு காஷ்மீர் காவல் உயர் அதிகாரி.
ஆனால்... அப்படி ஏதும் விசாரணை நடந்து... அப்படி ஏதும் கக்கியதாக அதன் பிறகு செய்திகள் ஏதும் இல்லை.
ஆனால்.....
ஒன்றரை வருடம் கழித்து....
ஓர் ஐஜி யால்.. பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட இந்த DSP தேவீந்தர் சிங்கை... உள்துறை அமைச்சர் அமித்ஷா... ஏன் அப்படியே விட்டுவிட்டார்... என்பது மர்மம் நிறைந்த புரியாத புதிர் ஆக உள்ளதாக... 2021 ஆகஸ்டு மாதம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை... வியந்து புருவம் தூக்கி உள்ளது.
புள்ளிகளை எல்லாம் இணைத்து கோலம் போடத் தெரிந்தவர்கள்..... இன்னும் நிறைய புரிவீர்கள்.
மேற்கண்ட செய்திகளின் லிங்க் கமெண்டில் தந்துள்ளேன். பாருங்கள். நன்றி சகோ. #👨மோடி அரசாங்கம்


![👨மோடி அரசாங்கம் - vias Kumar addresses a press conference] IGP Kashmir DSP Davindra Singh along with 2 militants on the arrest in Srinagar on Sunday India Arrested DSP Devinderl Sinsh to be treated as terrorist: IG J&K By IANS January 12, 2020 at 7:46 PM 1 day after Jammu and Kashmir DSP A along Devinder Singh was arrested with two militants the state police have confirmed that he will be dealt as a "terrorist" vias Kumar addresses a press conference] IGP Kashmir DSP Davindra Singh along with 2 militants on the arrest in Srinagar on Sunday India Arrested DSP Devinderl Sinsh to be treated as terrorist: IG J&K By IANS January 12, 2020 at 7:46 PM 1 day after Jammu and Kashmir DSP A along Devinder Singh was arrested with two militants the state police have confirmed that he will be dealt as a "terrorist" - ShareChat 👨மோடி அரசாங்கம் - vias Kumar addresses a press conference] IGP Kashmir DSP Davindra Singh along with 2 militants on the arrest in Srinagar on Sunday India Arrested DSP Devinderl Sinsh to be treated as terrorist: IG J&K By IANS January 12, 2020 at 7:46 PM 1 day after Jammu and Kashmir DSP A along Devinder Singh was arrested with two militants the state police have confirmed that he will be dealt as a "terrorist" vias Kumar addresses a press conference] IGP Kashmir DSP Davindra Singh along with 2 militants on the arrest in Srinagar on Sunday India Arrested DSP Devinderl Sinsh to be treated as terrorist: IG J&K By IANS January 12, 2020 at 7:46 PM 1 day after Jammu and Kashmir DSP A along Devinder Singh was arrested with two militants the state police have confirmed that he will be dealt as a "terrorist" - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_778022_9b8c275_1763082776661_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=661_sc.jpg)