ShareChat
click to see wallet page
search
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் #நெல்சன் மண்டேலா நினைவு தினம் இன்று டிசம்பர் 05, 2013 *நெல்சன் மண்டேலா நினைவு நாள்* நெல்சன் மண்டேலா  தென்னாப்பிரிக்காவின்  மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர்  நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர்  (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - ShareChat