🎬பாடகர் கண்டசாலா Ghantasala Venkateswara Rao, பிறந்த தினம் டிசம்பர் 4 , 1922💐
தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரிவர். இவரது முழுப்பெயர் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ். தெலுங்கு , தமிழ் ,கன்னடம் , மலையாளம் , துளு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இளவயதுக் காலம்
1922-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ம் நாள் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா தாலூக்காவிலுள்ள சௌதப்பள்ளி என்னும் ஊரில் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ் பிறந்தார். தந்தையார் பெயர் சூரய்யா கண்டசாலா. தாயார் பெயர் ரத்தம்மா.தந்தையார் ஒரு பாடகர். நாராயண தீர்த்தரின் தரங்கிணிகளைப் பாடுவார். மிருதங்கமும் வாசிப்பார். கண்டசாலா சிறு பையனாக இருக்கும்போது தந்தை மிருதங்கம் வாசிக்க, அந்தத் தாளத்திற்கேற்ப நடனமாடுவார்.
இசைப் பயிற்சி
விசாகப்பட்டினத்தில் துவாரம் வேங்கடசுவாமி நாயுடு முதல்வராக இருந்த இசைக்கல்லூரியில் இசை பயின்றார். அங்கு ஆசிரியராக இருந்த பி. சீதாராம சாஸ்திரி அவருக்கு இசை கற்றுக்கொடுத்தார். (இவர் பின்னாளில் கண்டசாலா திரைப்படங்களில் பாடிய காலத்திலும் உதவியாக இருந்தார்.)
பாடகர்/இசையமைப்பாளர்
அனைத்திந்திய வானொலியில் இவர் பாடிவந்தார். பின்னர் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனிக்காகச் சில பாடல்கள் பாடினார். அதனையடுத்து 1944-ஆம் ஆண்டு வெளியான சீதா ராம ஜனனம் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அப்போது இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பாராமன் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. அதனையடுத்து திரைப்படங்களில் பின்னணி பாடிவந்தார். முதன்முதலாக லக்ஸ்மம்மா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். அவர் பாடிய சில சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் சிலவற்றை கீழே காணலாம்.
வரிசை எண் பாடல் பாடியோர்
1. அமைதியில்லாதென் மனமே பாதாளபைரவி
2. சந்தோஷம் தரும் சவாரி போவோம்
தேவதாஸ்
3. துணிந்தபின் மனமே துயரங் கொள்ளாதே தேவதாஸ்
4. கனவிதுதான் நிஜமிதுதான்
தேவதாஸ்
5. உறவுமில்லை பகையுமில்லை
தேவதாஸ்
6. உலகே மாயம் வாழ்வே மாயம் தேவதாஸ்
7. ஆஹா இன்பநிலாவினிலே மாயாபஜார்
8. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா மஞ்சள் மகிமை
9. சுயநலம் பெரிதா பொது நலம் பெரிதா பொது நலம் பெரிதா யார் பையன்?
10. உல்லாச உலகம் உனக்கே சொந்தம் அலிபாபவும்40 திருடர்களும்.
11. ஓ! தேவதாஸ் ஓ! பார்வதி தேவதாஸ் (டூயட் பாட்டு)
12. குண்டு போட்ட ரிவால்வார் படார்
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே (சோலோ)
13. தேசுலாவதே தேன் மலராலே
மணாளனே மங்கையின் பாக்கியம் டூயட் பாட்டு
14. முத்துக்கு முத்தாக அன்புச் சகோதரர்கள் (சோலோ) இன்னும் பல #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம் #😎வரலாற்றில் இன்று📰


