திருமணம் 2 காரணங்கள்
நான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்க 2 முக்கிய காரணங்கள் இருந்தன... என்னை பற்றி ஒரு வதந்தி பரவியது.. மூத்த பெரிய தொழிலதிபர் ஒருவருடன், என்னை இணைத்து பேசப்பட்டது.. இது என்னுடைய பெரிய அதிர்ச்சியை தந்துவிட்டது..
இப்ராஹிம் ராவுத்தரே என்னிடம், உங்களை சினிமாவில் புக் செய்தால், சரியாக ஷூட்டிங் வரமாட்டீங்கள், நீங்கள் பெரிய இடம்" என்றெல்லாம் பேசினார்..
அந்த அளவுக்கு என்னை பற்றின வதந்தி தீயாய் பரவியது.. ஆனால் என்னுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த மனிரை ஒரு கிரிக்கெட் மேட்ச்சில் ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன்.. ஆனால், தவறான செய்தி நெருப்பு போல பரவியது..
நான் ஒரு நெருப்பு
நான் நெருப்பு என்பது என்னுடைய பெற்றோருக்கு தெரியும்.. என் மீதான நம்பிக்கை அவர்களுக்கு எப்போதுமே போகாது.. ஆனால், இந்த வதந்தியை அவர்களால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை.. மகளின் பெயர் கெடுகிறதே, நாளைக்கு திருமணம் நடக்காமல் போய்விடுமோ? என்று பயந்தார்கள்.. அதுவும் இல்லாமல் என்னுடைய அம்மாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது.. அதனால்தான் என்னுடைய கல்யாணத்தை செய்வது என்று முடிவானது.
4 விருப்பங்கள்
அதற்கு பிறகு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள்.. ஒன்றரை வருடத்துக்கு மாப்பிள்ளை எனக்கு கிடைக்கவில்லை.. காரணம், தனக்கு வரப்போகும் கணவரிடம் 4 விஷயங்களை எதிர்பார்த்தேன்..
முதலாவதாக, ஜாதி எனக்கு முக்கியமில்லை.. ஆனால் கணவர் சைவமாக இருக்க வேண்டும், ஏனென்றால் எனக்கு சைவம்தான் சமைக்க தெரியும். அடுத்ததாக சிகரெட் பிடிக்க கூடாது, மது அருந்தக்கூடாது, இந்திய சினிமாவில் தொடர்வதற்கு இங்குள்ள மாப்பிள்ளை வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்தேன்.
ஆனால், இந்த நான்குமே சேர்ந்தது போல மாப்பிள்ளை அமைவது சிரமமாகிவிட்டது. இறுதியில் சினிமாவை தியாகம் செய்தேன். அமெரிக்கா செல்லும்படி ஆனது.. சினிமாவில் தயாரிப்பு, சினிமாவில் விநியோகஸ்தர் பணிகளை மேற்கொண்டு சினிமாவிலேயே தொடர்பில் இருந்தாலும், என்னால் நடிக்க முடியவில்லை.
தவறான கணிப்பு
நான் சிறுவயதில் ஒருவரை காதலித்தேன்.. அந்த இளைஞர் எங்கள் வீட்டில்தான் இருந்தார்.. ஆனால் நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அந்த இளைஞன் என்னை ஜட்ஜ் செய்துவிட்டார்.. என்னை தவறாக கணித்துவிட்டார்.. இதில் என்னுடைய அம்மாவுக்கு ரொம்பவே வருத்தம்.. அதனால் பிரிய வேண்டியிருந்தது.
அதற்கு பிறகு பெற்றோர் விருப்பப்படியே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொண்டேன்.. நான் ஐஏஎஸ் ஆகணும் என்று நினைத்தார்கள்.. ஆனால் சினிமாவுக்கு சென்றுவிட்டேன்.. அதனால், பெற்றோர் பேச்சை திருமண விஷயத்தில் கேட்டு நடந்தேன்.
கணவரின் புரிதல்
நடிகர், நடிகைகளுக்கு சினிமா தொழிலில் நேரம் காலம் கிடையாது.. ஆனால், என் கணவர் ஒரு டாக்டராக இருப்பதால், ஒரு நடிகையின் பணி சூழலை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது..
சினிமாவில் ஒரு கிசுகிசு என்னை பற்றி வந்ததுக்கே, எனக்கு வீட்டில் கல்யாணம் செய்துவைத்து விட்டார்கள். ஆனால், இப்போது அரசியலில் என் மீது தினம் தினம் அவதூறு பரப்பப்படுகிறது. தவறான செய்திகள் வரும்போதெல்லாம் , இன்றுவரை எனக்கு புகுந்த வீட்டில் உறுதுணையாக இருக்கிறார்கள்" என்றெல்லாம் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢 #💃நடிகை கஸ்தூரி கருத்தில் சர்சை


