ShareChat
click to see wallet page
search
*இலங்கைப் பேரினவாதத்தின் தொல்லியல் முகம்* - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை - 14 நவம்பர் 2025. தமிழர்களின் நிலப்பறிப்பு” என்பது இன்றல்ல, இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இருந்தே ஆரம்பிக்கத் தொடங்கி விட்டது. 1948-லிருந்து 2009 – வரை சுமார் 12 லட்சம் ஏக்கர் வரையிலான தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1949 – ல் கல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம், 1970-ல் ஜெயவர்தனே ஆட்சிக் காலத்தில் இலங்கையின் ‘மகாவெளி நீர்ப்பாசனத் திட்டம்’ என சுமார் 7 லட்சம் வரையிலான தமிழர்களின் வடக்கு – கிழக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த நிலப்பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் சிங்களக் குடும்பங்கள் (10 லட்சம் சிங்களர்கள்) குடியமர்த்தப்பட்டனர். இது மட்டுமல்ல, அதற்குப் பிறகு இறுதிப்போர் நடந்த 2009-காலகட்டம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டன. போர் முடிந்த 2009 -க்குப் பின்பும் மீண்டும் 1 லட்சம் ஏக்கர் வரை சிங்கள இனவெறி அரசுகளால் தமிழர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், மாவீரர் சமாதிகள் என அனைத்தும் களவாடப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாக, பௌத்த தலங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அறிக்கைகளான UNHRC, Oakland institute போன்றவற்றின் அறிக்கைகள் இந்த நிலப்பறிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. தமிழ் திராவிட பண்பாட்டுடன் தொடர்புடையவை என அறிஞர்களால் கூறப்படும் தமிழ் மக்கள் வாழும் பகுதியான குருந்தூர் மலையை “பழங்கால சிங்கள பௌத்த குடியிருப்பு” என்று தொல்லியல் துறை அபகரிக்கத் துவங்கியது. இந்த மலையில் 2021லிருந்து இன்று வரை பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் சுமார் 600க்கும் மேற்பட்டவை. இவை யாவும் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. அனுர திசநாயக ஆட்சி நடக்கும் 2025 -லும் 341 ஏக்கர் தமிழர் விவசாய நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டது. 2025- மே 15 அன்று புத்த விகாரை கட்டுமானத்தை பௌத்த பிக்குகளும் சிங்கள திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்தினர். 2005-மே 29-ல் இதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஜூன் 24-ல் யாழ்ப்பாண கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் வாசிக்க👇 https://may17kural.com/wp/the-archaeological-face-of-srilankan-racism/ மே 17 இயக்கக் குரல் 9444327010 #தொல்லியல் #தொல்லியல் துறை #📺அரசியல் 360🔴 #✍️மே17 இயக்கக் குரல் #🚨கற்றது அரசியல் ✌️
தொல்லியல் - బిులెడిబి రఢిబరిబంలిటంరి தொல்பொருளியல் திணைக்களா Department of Archaeold బిులెడిబి రఢిబరిబంలిటంరి தொல்பொருளியல் திணைக்களா Department of Archaeold - ShareChat