#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 27
ராபர்ட் எட்வர்ட்சு பிறந்த நாள்
ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு (Robert Geoffrey Edwards, செப்டம்பர் 27, 1925-ஏப்ரல் 10, 2013), பிரித்தானிய உயிரியலாளரும் சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்தவர்களில் முன்னோடியும் ஆவார். மருத்துவர் பாட்ரிக் ஸ்டெப்டோவுடன் (1913 – 1988) இணைந்து இவர் நடத்திய ஆய்வுகள் 1978 ஆம் ஆண்டில் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்க வழிவகுத்தது. இவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
#அறியப்படுவது
reproductive medicine
in-vitro fertilization
#விருதுகள்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2010)
#முதல் சோதனைக் குழாய்க் குழந்தை
ராபர்ட் எட்வர்ட்சு 1960களிலிருந்தே செயற்கைக் கருத்தரிப்பு முறையைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். பல முயற்சிகளுக்குப் பின் செயற்கைக் கருத்தரிப்பு வழியாக லூயிசு பிரவுன் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை சூலை 25, 1978இல் லெஸ்லி பிரவுன் என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்குப் பிறந்தது.
அந்த முதல் குழந்தையின் பிறப்பைத் தொடர்ந்து, கடந்த 35 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் சுமார் 5 மில்லியன் குழந்தைகள் செயற்கை முறைச் சோதனைக் குழாய் கருத்தரிப்பின் மூலம் பிறந்துள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் எட்வர்ட்சும் பேட்ரிக் ஸ்டெப்டோவும் கண்டுபிடித்த குழந்தைக் கருத்தரிப்பு முறை உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.
எனினும், கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கடவுள் வகுத்த இயற்கைச் சட்டத்தை மதிக்காமல் செயற்கைமுறையில் கருத்தரிக்க மனிதர் முனைவது அறநெறிக்கு எதிரானது என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு. மேலும், ஒரு கருத்தரிப்பு வெற்றிகரமாக நிகழவேண்டும் என்றால் அதற்குத் தயாரிப்பாக வேறுபல கருக்களையும் உருவாக்கவேண்டும், பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படாத பல கருக்கள் சோதனைக் கூடத்தில் பாதுகாக்கப்படவேண்டும், பயன்படுத்தப்படாத கருக்கள் அழிக்கப்பட நேரிடும். இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு அப்போது எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது.
#ராபர்ட் எட்வர்ட்சு ஏப்பிரல் 10, 2013இல் காலமானார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*