ShareChat
click to see wallet page
search
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் *டிசம்பர் 09, 1979* பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள். பெரியம்மை மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடும் நிலை உருவாகியது. உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் முகத்தில் நீங்காத தழும்புகளால் காணப்பட்டனர். 20-ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300- 500 மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் ஆண்டு கண்டுபிடித்தார். 1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை. அதனால் 1979-ம் ஆண்டு டிசம்பர் 09-ந்தேதி இந்நோய் உலகத்தில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - ShareChat