ShareChat
click to see wallet page
search
கடந்த வாரம் மோன்தா புயல் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.. அதன்பின்னர் மழையின் அளவு படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் " ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. மயிலாடுதுறை, கடலூர், புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. வரும் 6-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. தஞ்சாவூர், திருவாரூ, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. சென்னையை பொறுத்த வரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டியும் இருக்கக்கூடும்.. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது #🔴7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை😱 #📢 நவம்பர் 04 முக்கிய தகவல்🤗
🔴7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை😱 - 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையம் 5ಹ66.. ! 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையம் 5ಹ66.. ! - ShareChat