ஸ்ரீ (969)🏹🚩ஸ்ரீ நம்பிள்ளை திருநட்சத்திர உற்சவம் --கார்த்திகையில் கார்த்திகை--இன்று 04/12--(பதிவு 2)
"தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி"-- ஈடு மாகாத்மியம் !!
🙏👌👍👏🙏🤚👍👏🙏
"இந்திரன் வார்த்தையும்,நான்முகன் வார்த்தையும்,ஈசனுடன்--
கந்தன் சொல் வார்த்தையும் கற்பவர் ஆர்? இந்தக் காசினிக்கே
நந்தினமுத்தெறி நம்பூர் வரதர் தம் மாளிகையிற்
சிந்தின வார்த்தை கொண்டே சிலநாடு திறை,கொள்வரே !!"
ஈடு முப்பத்தாறாயிரம் !
📔📕📗📘📙📒📜
நம்பிள்ளையிடம் காலட்சேபம் கேட்டு வந்த அவரது சீடர் வடக்குத் திருவீதிப்
பிள்ளை ,கேட்டவற்றை அன்றன்றே ஓலைச்சுவடிகளில் எழுதி வந்தார்.
அந்த ஓலைச் சுவடிகளுக்கு நித்யமும் திருவாராதனை செய்து வந்தார்.ஒருமுறை தம் ஆசார்யர் நம்பிள்ளை, தம் திருமாளிகைக்கு,
எழுந்தருளிய போது,அவரைத் தம் இல்லத்தில் திருவாராதனை செய்யுமாறு வேண்டினார்.
அப்போது இந்த ஓலைச் சுவடிகளைக்
கண்ட நம்பிள்ளை அவற்றை எடுத்து,
சில சுவடிகளைப் படித்துப் பார்த்தார்.
அவை ஆசார்ய நியமனப்படி,
எழுதப்படாவிட்டாலும்,36000 படிகள் கொண்ட,அந்த உரை எழுதப்பட்ட பாங்கு/நடை/விவரம் பார்த்து நம்பிள்ளையே வியந்து உகந்தார்.(ஒரு படி என்பது 32 எழுத்துக்கள் -மெய்யெழுத்து தவிர்த்த உயிர்/உயிர்மெய் எழுத்துக்கள்- கொண்ட ஒரு சொற்றொடர்/செய்யுள்) .நம்பிள்ளை சாதித்த அந்த வியாக்யானம்,"ஈடு 36000" என்று போற்றப்பட்டது.திருவாய்மொழிப் பாசுரங்களின் மேன்மைக்கு ஈடாக/ஒப்பாக இந்த வியாக்யானம் அமைந்ததால் 'ஈடு'என்று போற்றப்பட்டது.மேலும் இந்த வ்யாக்யானம் அடியார்களை திருவாய்மொழியிலும்,பகவானது கல்யாண குணங்களிலும் ஆழ்ந்து ஈடுபடத் தூண்டுவதாலும் "ஈடு". இது "திருவாய் மொழி ஈடு"என்று கொண்டாடப்
படுகிறது."நம்பிள்ளை ஈடு"என்றும் "ஈடு முப்பத்தாறாயிரம்" என்றும் அழைக்கப்படுகிறது.
பெரியபெருமாள் கேட்க விழைந்த,
நம்பெருமாள் திருச்செவி சாத்தி உகந்த நம்பிள்ளை ஈடு !
🔔📢📢📢📢📢📢📢📢🔔
பெரிய கோயிலில் சந்தனு மண்டபக் கீழப்படிக்கு எதிரில் உள்ள தூணில்,சாய்ந்து அமர்ந்து கொண்டு நம்பிள்ளை காலட்சேபம் செய்தது மிகவும் பிரசித்தமானது.மிகச் சிறந்த பூர்வாசார்யர்கள் பலரும் நம்பிள்ளை கோஷ்டியில் இருந்து,அந்வயம் செய்தார்கள்.ஒரு நாள் பள்ளி கொண்டிருக்கும் பெரியபெருமாளே எழுந்து வந்து,நம்பிள்ளை காலட்சேபம் கேட்க வந்துவிட்டாராம் !அப்போது காயத்ரி மண்டப வாயிலில் நின்று கொண்டிருந்த
'திருவிளக்குப் பிச்சன்'(பெருமாள் சந்நிதியில் விளக்குகளுக்கு எண்ணெய் விட்டு, பராமரிக்கும் வேலை செய்பவர்),பெருமாளிடம்,
"தேவரீர் அர்ச்சாவதார த்தில் எழுந்தருளியிருக்கும்போது,
எழுந்து வரக் கூடாது; சென்று சயனித்துக் கொள்ளுங்கள்" என்று விண்ணப்பம் செய்ய,பக்தன் சொல் கேட்டு,பெருமாள் மீண்டும் சயனித்துக் கொண்டாராம் !!
ஈடு கேட்கும் ஆசை நிறைவேறாத பெருமாள்,பின்னர் மணவாள மாமுனிகள் மூலம் ஓராண்டு காலம் தம் உற்சவங்களைஎல்லாம் நிறுத்தி வைத்து விட்டு, ஈடு கேட்டு, தமது விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொண்டார். ஈடு உபதேசித்த மாமுனிகளை தம் ஆசார்யராக வரித்து,
"ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் சமர்ப்பித்தார்.
ஈட்டில் ஒரு சின்னஞ்சிறு நீர்த்திவளை:
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி தன்னை,
வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை -இந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது,
ஈடு முப்பத்தி ஆறாயிரம்"
(உபதேச ரத்தின மாலை-44)
திருவாய்மொழி ஓர் அமுதக்கடல் என்றால்,ஈடு ஒரு மகா சமுத்திரம்.
இனிப்பு நீர் நிறைந்த மகா சமுத்திரம்.
அதனுள் மூழ்கிப் பருகுவது என்பது நம்மைப் போன்றோருக்கு இயலாத காரியம்.(சாஸ்திரங்களை நன்றாகக் கற்றறிந்த ஆசார்யர்கள்/ஞானிகள் மூலம், மிகுந்த சிரத்தையுடன் கேட்டால் மட்டுமே ஓரளவு புரிந்து கொள்ள முடியும்) சமுத்திரக் கரையில் நின்றும் அனுபவிக்க இயலாது.கடலோரத்தில் வீசும் காற்றில் வந்து, நம் மீது விழுந்த ஒரு சின்னஞ் சிறு நீர்த்திவளையாய் ஒரு சிறு,ஆனால் மஹா அர்த்தம் உள்ள பகுதி:
நம்பிள்ளை ஈடு வியாக்யானத்துக்கு மூன்று முன்னுரைகள்--
"அவதாரிகைகள்"உரைத்துள்ளார்.
அவற்றுள் மிகச் சிறிதாக உள்ள மூன்றாம் அவதாரிகை:
"மூன்றாம் ஸ்ரீ யபதி :
ஸ்ரீ பரதாழ்வான் நிலையுடன் ஒப்பு:
👣👣👣👣👣👣👣👣👣👣👣
நான்கு பிரபந்தங்களுள் –(நம்மாழ்வார் அருளிச் செய்த)-பக்தி யோகத்தின் மேன்மையைக் கூறும் பிரபந்தம் திருவாய் மொழி என்கிறார் .
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான சர்வேஸ்வரன்,
"மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து"
(திருவாய்2-6-8)என்கிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த இவரை
(நம்மாழ்வாரை),"அடிமை யடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்"
(2-6-8) என்று தம் திருவாயாலே அருளிச் செய்யலாம் படி -முதல் அடியிலேயே விசேஷ கடாஷத்தைப் பண்ணி அருளினான் .
முதல் தன்னிலே சித் ஸ்வரூபம் ஆதல் -அசித் ஸ்வரூபம் ஆதல் -ஈஸ்வர ஸ்வரூபம் ஆதல் அறியாதே இருக்கிற இவருக்கு,அசித் அம்சம் த்யாஜ்யம் என்னும் இடத்தையும்,
சேதனன் உபாதேயம் என்னும் இடத்தையும்,தான் உபாதேய தமன் என்னும் இடத்தையும்,அவன் தானே காட்டிக் கொடுக்கக் கண்டு, -அவனோட்டை அனுபவத்துக்கு இத்தேஹ சம்பந்தம் விரோதியாய் இருக்கையாலே த்வத் அனுபவ விரோதியான இத்தேக சம்பந்தத்தை அறுத்து தந்து அருள வேண்டும் -என்று அர்த்தித்தார் --திரு விருத்தத்தில்!!
சம்சார சம்பந்தம் அற்று ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்கக் கடவ தம்முடைய மேன்மையையும் -நீர்மையையும் -வடிவு அழகையும் பரப்பற ஏழு பாட்டாலே அனுபவிக்கலாம்படி
இங்கேயே இருக்கச் செய்தே ஒரு தசா வைசயத்தைப் பண்ணிக் காட்ட -அவ வழகை அனுபவித்தார் திரு வாசிரியத்தில் !!
இப்படி அனுபவித்த விஷயத்தில் விஷய அநுரூபமான ஆசை கரை புரண்ட படியைச் சொன்னார் பெரிய திருவந்தாதியில் !!
ஆமத்தை அறுத்து -பசியை மிகுத்து -சோறிடுவாரைப் போல
தமக்கு ருசியைப் பிறப்பித்த படியையும் அந்த ருசி தான் -பர பக்தி, பர ஞான,பரம பக்திகளாய்க்
கொண்டு பக்குவமான படியையும்,பின்பு பிரகிருதி சம்பந்தமும் அற்று, பேற்றோடு தலைக் கட்டின படியையும் சொல்லுகிறது திருவாய் மொழியிலே !!!
கைங்கர்ய மநோரதம் பண்ணிக் கொண்டு வரக் கொள்ள –கைகேயி அழைத்த -ராஜன் -என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரத ஆழ்வான் பட்ட பாடு போல இருக்கிறதாயிற்று-திரு விருத்தத்தில் நிலை !
அவன் திருச்சித்திர கூடத்திலே பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் என்று கேட்டு ஏபிச்ச சசிவைஸ் ஸார்த்தம் – என்கிறபடியே
என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்க மாட்டாதவர் இத்தனை பேர் ஆறாமை கண்டால் மீளாது ஒழிவரோ –
"சிரஸா யாசிதோ மயா"-என் அபிமதம் தன் தலையாலே இரந்து செய்யக் கடவ, அவர் நான் என் தலையாலே மறுப்பரோ
ப்ராதா -நான் தம் பின் பிறந்தவன் அல்லேனோ! –
சிஷ்யச்ய -பின் பிறந்தவன் என்று கூறு கொள்ள இருக்கிறேனோ –
மந்திர சம்பந்தமும் தம்மோடே அன்றோ?
தாச்யச்ய -சிஷ்யனாய் க்ரய விக்ரய அர்ஹன் அன்றிக்கே இருக்கிறேனோ !
"பிரசாதம் கர்த்தும் அர்ஹதி" ஆனபின்பு -என் பக்கல் பிரசாதத்தைப் பண்ணி அருளீரோ -என்று மநோ ரதித்துக் கொண்டு போகிற போதை தரிப்பு போல திருவாசிரியத்தில் நிலை.
ஸ்ரீ நந்தி கிராமத்தில் "ராமா கமன காங்ஷயா" -என்கிறபடியே பதினாலு ஆண்டும் ஆசை வளர்த்துக் கொண்டு
இருந்தார் போல இருக்கிறது பெரிய திருவந்தாதியில்.
மீண்டு எழுந்து அருளி –திரு அபிஷேகம் பண்ணி யருளி அவனும் ஸ்வரூப அநு ரூபமான பேறு பெற்றால் போல இருக்கிறது -இவருக்கு(நம்மாழ்வாருக்கு) திருவாய் மொழியில் பேறு –
திருவாய் மொழிக்காக சங்க்ரஹம் முதல் திருவாய் மொழி !
👌👍👌👍👌👍👌👍👌👍👌
முதல் திருவாய் மொழியினுடைய சங்க்ரஹம் முதல் மூன்று பாட்டுக்கள்- !
முதல் மூன்று பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் பாட்டு !!
முதல் பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் அடி !! –என் போல் என்னில்
"ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவா தர்வணாநி ச சர்வம் அஷ்டாஷர அந்தஸ் ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம்" -என்கிறபடியே !!
சகல வேத சங்க்ரஹம் திரு மந்த்ரம்
அதினுடைய சங்க்ரஹம் பிரணவம்
அதினுடைய சங்க்ரஹம் அகாரம் ஆனால் போல –
மற்றும் பாரத ஸ்ரீ ராமாயணாதி களையும் சங்ஷேப விச்தரங்களாலே செய்தார்கள் இறே"
(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
ஸ்ரீரங்கம்:
1 நம்பிள்ளை சந்நிதியில் நம்பிள்ளை
(திருவடியில் ஸ்ரீபின்பழகிய பெருமாள் ஜீயர்)
2,3:பெரிய கோயிலில் நம்பிள்ளை சாயந்தமர்ந்து ஈடு சாதித்த தூண்.
4.நம்பிள்ளை கோஷ்டியில் அந்வயி
க்க --எழுந்த வந்த பெரிய பெருமாள் !
திருவல்லிக்கேணி நம்பிள்ளை சந்நிதி:
5.நம்பெருமாளும் நம்பிள்ளையும்.
6.நம்பிள்ளை. #பெருமாள்


