ShareChat
click to see wallet page
search
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சந்தனக்குமார் (44), அவரது மனைவி ஜெயலட்சுமி (38) ஆகியோர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தனர். இவர்களின் உறவினரான காளிமுத்து (29) என்பவரும் பனியன் கம்பெனியில் வேலைக்காகத் திருப்பூர் வந்து, உறவினர் என்ற முறையில் சந்தனக்குமாரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். சந்தனக்குமாருக்கு, காளிமுத்து மாமா உறவு முறை ஆகும். ஒரே வீட்டில் வசித்ததால், காளிமுத்துவுக்கும் சந்தனக்குமாரின் மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைக் கண்ட சந்தனக்குமார், இருவரையும் கண்டித்தும், அவர்கள் அந்த உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். இந்தக் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், சந்தனக்குமார் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். மாமா இறந்த பிறகும், காளிமுத்து அதே வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். இதனை அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினரும் ஜெயலட்சுமியுடனான உறவு குறித்து இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பால், வாழ்க்கையில் விரக்தியடைந்த காளிமுத்து மற்றும் ஜெயலட்சுமி இருவரும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரங்கநாதபுரத்தில் உள்ள ரயில் தண்டவாளத்துக்கு இருவரும் சென்றனர். அப்போது கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரைக்குச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் அவர்கள் இருவரும் உடல் துண்டாகி உயிரிழந்தனர். இது குறித்துப் பழனி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 - ரயில் முன் பாய்ந்து ஜோடி கள்ளக்காதல் தற்கொலை. விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்! ரயில் முன் பாய்ந்து ஜோடி கள்ளக்காதல் தற்கொலை. விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்! - ShareChat