#oru kai paarppomaa குறிப்புகள்:*
🟥〰️〰️〰️〰️〰️〰️〰️〰️🟥
*ஓணம் நாளில் கேரளாவின் இந்த 5 பாரம்பரிய ஓணம் சத்யா ரெசிபிக்களை ட்ரை பண்ணி பாருங்க..*
*1. பருப்பு கறி*
*தேவையான பொருட்கள்:*
* பாசிப்பருப்பு - 1 கப் *
தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் - 1 கப்
* * சின்ன வெங்காயம் - 4-5
* * பூண்டு - 1 பல்
* * பச்சை மிளகாய் - 2
* * சீரகம் - 1 டீஸ்பூன்
* * மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* * உப்பு - சுவைக்கேற்ப
*தாளிப்பதற்கு..*
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* * கடுகு - 1 டீஸ்பூன்
* * சின்ன வெங்காயம் - 3
* * வரமிளகாய் - 4
* * கறிவேப்பிலை - 1 கொத்து
*செய்முறை:*
*முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் வறுத்த பாசிப்பருப்பை எடுத்து, பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* * விசில் போனதும் குக்கரைத் திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* * பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* * பின் குக்கரில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும். அதிகமாக கொதிக்க வைத்துவிட வேண்டாம்.
* * இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பருப்புடன் சேர்த்து கலந்தால், பருப்பு கறி தயார்.
*2. அவியல்*
*தேவையான பொருட்கள்:*
* தண்ணீர் - 1/2 கப்
* *
* சேனைக்கிழங்கு - 200 கிராம் (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது) * வெள்ளை பூசணி - 200 கிராம் (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது) * கேரட் - 1 கப் (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது) * புடலங்காய் - 1 கப் (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது) * வெள்ளரிக்காய் - 1 கப் (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது) * வாழைக்காய் - 1 கப் (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது) * கத்திரிக்காய் - 2 (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 1 கப் (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது) * முருங்கைக்காய் - 2 (நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது) * உப்பு - சுவைக்கேற்ப * துருவிய தேங்காய் - 2 கப் * சீரகம் - 1 டீஸ்பூன் * மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 * தயிர் - 1/2 கப் * தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
*செய்முறை:*
*
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 1 இன்ச் நீள துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கு, வெள்ளைப்பூசணி, கேரட், புடலங்காய், வெள்ளரிக்காய், வாழைக்காய், கத்திரிக்காய் சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து முக்கால்வாசி வேக வைக்க வேண்டும். * அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* காய்கறிகள் ஓரளவு வெந்ததும், அதில் பீன்ஸ் மற்றும் முருங்கைக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் மீண்டும், 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். * காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் தயிரை சேர்த்து கிளறி, தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான அவியல் தயார்.
*3. ஓலன்*
*தேவையான பொருட்கள்:*
* தட்டைப்பயறு - 1/4 கப் (4 மணிநேரம் ஊறு வைத்துக் கொள்ளவும்)
* வெள்ளைப்பூசணி - 1 1/2 கப் (மெல்லிய சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* * தேங்காய் பால் - 3 கப்
* * உப்பு - சுவைக்கேற்ப
* * பச்சை மிளகாய் - 4
* * கறிவேப்பிலை - 1 கொத்து * கெட்டித் தேங்காய் பால் - 1/2 கப்
* * தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
*செய்முறை:*
* முதலில் ஒரு வாணலியில் ஊற வைத்த தட்டைப்பயறை சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மூடி வைத்து, பயறை வேக வைக்க வேண்டும்.
* தட்டைப்பயறு வெந்ததும், அதில் வெள்ளைப்பூசணியை சேர்த்து, அதில் 3 கப் தேங்காய் பால் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்து, பூசணியை நன்கு வேக வைக்க வேண்டும்.
* வெள்ளைப்பூசணி நன்கு வெந்ததும், அதில் 1/2 கப் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்தால், சுவையான ஓலன் தயார்.
*4. காலன்*
*தேவையான பொருட்கள்:*
* நேந்திரம் காய் - 1 (பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* சேனைக்கிழங்கு - சிறிய துண்டு (பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* தண்ணீர் - சிறிது
* புளித்த தயிர் - 1 கப்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* * கடுகு - 1/2 டீஸ்பூன்
* * வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* * கறிவேப்பிலை - 1 கொத்து * வரமிளகாய் - 2
செய்முறை: * முதலில் ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக்கப்பட்ட நேந்திரங்காய், சேனைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 கப் நீரை ஊற்றி கலந்து மூடி அடுப்பில் வைத்து, நன்கு வேக வைக்க வேண்டும். * பின் மிக்சர் ஜாரில் தேங்காய், சுரகம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கலந்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். * அதன் பின் அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து கலந்து, குறைவான தீயில் வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, மற்றொரு அடுப்பில் உள்ள காயுடன் சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான காலன் தயார்.
*5. பிங்க் பாலடை பிரதமன்*
*தேவையான பொருட்கள்:*
* பாலடை - 200 கிராம்
* பால் - 1 1/2 லிட்டர் + 1/2 லிட்டர்
* சர்க்கரை - 150 கிராம் + 50 கிராம்
* தண்ணீர் - 1 லிட்டர்
*செய்முறை:*
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாலடையை வேக வைத்த நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதித்ததும், அதில் பாலடையை சேர்த்து 1 நிமிடம் கலந்து விட்டு, பின் அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 லிட்டர் பாலை ஊற்றி, அத்துடன் 150 கிராம் சர்க்கரையை சேர்த்து குக்கரை மூடி, விசில் போட்டு, குறைவான தீயில் வைத்து, 3/4 மணிநேரம் கொதிக்க வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் பால் பிங்க் நிறத்தில் கிடைக்கும்.
* பின்பு ஊற வைத்த பாலடையை குளிர்ந்த நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* 3/4 மணிநேரம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலை ஊற்றி, 1 லிட்டர் நீரை ஊற்றி, அத்துடன் கழுவி வைத்துள்ள பாலடையை சேர்த்து கலந்து, அத்துடன் 50 கிராம் சர்க்கரையை சேர்த்து கலந்து, பால் சுண்டி பாலடை நன்கு வெந்து கெட்டியானதும், அதில் குளிர வைத்த குக்கர் பாலை ஊற்றி காய்ந்ததும் கிளறி, ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், பிங்க் பாலடை பிரதமன் தயார்.
🟥🍃🟥🍃🟥🍃🟥🍃🟥🍃🟥🟥🍃🟥🍃🟥🍃🟥🍃🟥🍃🟥


