கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதியை சேர்ந்த கலிபுல்லாவுக்கு 66 வயது ஆகிறது. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம்-கலையநல்லூர் சாலையில் வாகனங்கள் சுத்தம் செய்யும் சர்வீஸ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம், தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் அரவிந்த் (26) என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வந்ததார். கலிபுல்லா நேற்று முன்தினம் இரவு காரை சுத்தம் செய்யுமாறு அரவிந்திடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து கலிபுல்லாவின் சர்வீஸ் சென்டரில் இருந்த அரவிந்த், மின்மோட்டாரை இயக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு காரை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வாட்டர் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்த கரிம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த 18 வயதாகும் ஷாகில் என்பவர், அரவிந்த்தை காப்பாற்ற முயற்சி செய்தார் அப்போது அவர், மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மயங்கி விழுந்தனர்
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அரவிந்த் மற்றும் ஷாகில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான கலிபுல்லா மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் காரை கழுவியபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக நம்முடைய உடல் மின்சாரத்தைக் கடத்தும் திறன் கொண்டது. ஏனெனில் மனித உடலில் சுமார் 70% நீர் மற்றும் தாது உப்புகள் இருக்கிறது. தண்ணீர் மற்றும் தாது உப்புகள் மின்சாரத்தைக் கடத்தும் திறன் உடையவை. எனவே, ஒருவர் உயர் மின்னழுத்தம் உள்ள கம்பியை தொடும் போது, மின்சாரம் உங்கள் உடல் வழியாகப் பாய்ந்து, குறைந்த மின்னழுத்தம்அல்லது பூமிக்கு செல்ல வழியைதேடும். அப்போது தான் ஆபத்து ஏற்படுகிறது.அதிலும் ஈர உடலுடன் மின்சாரத்தை தொடும் போது, உயிரையே எடுத்து விடுகிறது #😨கார் வாஷில் பறிபோன 2 உயிர்கள்🚗 #🔴இன்றைய முக்கிய செய்திகள்


