#யார்_தீவிரவாதி..?
போரின் இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 200 தமிழ்மக்கள் படுகொலை செய்யபட்டுகொண்டிருக்க குறிப்பாக மே 15 அன்று காயம்பட்டு கிடந்த பல்லாயிரக்காணக்கான மக்கள் புல்டோசர் ஏற்றி படுகொலை செய்யபட்டபின் கொழும்பு நகரில் பதற்றம்,கொழும்பு மக்கள் மத்தியில் பதற்றம்,கொழும்பு இராணுவ உயர் மட்டத்தில் பதற்றம் ஏன் தெரியுமா
இந்த படுகொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக கொழும்பு நகரை குறிவைத்து புலிகளால் மிகக் கடுமையானதொரு தாக்குதல் நடாத்தபடுமென்ற எதிர்பார்ப்பு,பரிதவிப்பு உண்மையில் இப்படியானதொரு படுகொலைக்கு பின்பு தளபதிமார்களால் தலைவருக்கு கொழும்பு நகரை மையமாக வைத்து மிகக் கடுமையானதொரு தாக்குதல் நடத்தபட வேண்டுமென்ற அப்படியொரு அழுத்தம் கொடுக்கபட்டது உண்மைதான்.
ஆனால்
அதுக்கு அண்ணை என்ன சொன்னார் தெரியுமா?
"தமிழ் மக்களுக்கான நீதியை வரலாற்றுக்கும் உலக சமுதாயத்திற்கும் விட்டுவிடுகின்றேன்.
புலிகள் இயக்கம் அப்படியொரு செயலை செய்து அவனுக்கும் நமக்கும் வித்தியாசமில்லையென்டு காட்டவேண்டாம்.
நிராயுதபாணியாக நிக்கும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது கோழைகளின் செயல்.
புலிகள் ஒருபோதும் கோழைகள் அல்ல"
என்று பழிக்கு பழி வாங்க துடித்த தளபதிமார்களின் அந்த தாக்குதல் திட்டத்தையும் நிராகரித்தார்.
அன்றுகூட தலைவர் நினைத்திருந்தால் ஆமி கொன்ற தமிழ் மக்களைவிட பத்துமடங்கு சிங்கள மக்களை அழித்தொழித்திருக்க முடியும்.
ஆனால்
அப்படியேதும் நடக்ககூடாதென கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார்.
எது பயங்கரவாதம்?
யார் கொடுங்கோலன்?
யார் தீவிரவாதி?
யார் பயங்கரவாதி?
யாரடா சர்வாதிகாரி?
மனிதத்தை போதிக்கும் மன்றங்களே
புனிதத்தை போதிக்கும் தேசங்களே
சர்வதேச நாட்டாமைகளே,தீவிரவாதி முத்திரை குத்தியவர்களே,மனித உரிமை ஆர்வலர்களே,நீதிமான்களே,நடுநிலையாளர்களே.
எங்கட அண்ணண் இருக்கும் திசையை நோக்கி வணங்குங்கள் ஏனெனில்
#பிரபாகரம் என்பது
அத்தனை புனிதமானது.
அத்தனை உயர்வானது
அத்தனை உன்னதமானது
அத்தனை மென்மையானது
அத்தனை மேன்மையானது
அத்தனைக்கும் மேலானது.
#வேலுப்பிள்ளை பிரபாகரன்


