#நவராத்ரி ஸ்பெஷல் #நவராத்ரி பூஜை #பத்திஸ்டேட்ஸ் *புரட்டாசி மாதம் 10ம் நாள் 26-செப்டம்பர்-25, ப்ருகு வாரம் வெள்ளிக்கிழமை* *நவராத்திரி ஐந்தாம் நாள்* *அன்று*
புனிதமாக அம்பிகையை வைஷ்ணவி மற்றும் ஸ்கந்தமாதா அலங்காரத்தில் போற்றி வழிபடுவோம் வாரீர்
அன்னம், கிளி போன்ற பறவை வகை கோலம் வரைந்து அம்பிகையை வழிபட வேண்டும். மலர் மனோரஞ்சிதம் பாரிஜாதம் மலர் மாலைகள் சாற்றி திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அர்ச்சனை செய்து, .
நைவேத்தியமாக தயிர்சாதமும், பூம்பருப்பு சுண்டல் கடலை பருப்பு சுண்டல் மாதுளை பழம் படைத்து வழிபட வேண்டும். . இந்த நாளில் அம்பிகைக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.
நவதுர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 5 ஆம் நாளுக்கு தேவியின் ஸ்கந்த மாதா ரூபத்தில் வழிபடவேண்டும்
வைஷ்ணவி தேவி
சங்கு, சக்கரம், கதை, வில் பொற்கரங்களில் ஏந்தியவளே . கருடன் வாகனத்தில் அமர்ந்து விஷ்ணு ஸ்வரூபமாக
அபூர்வ தரிசனம் தருபவளே
துன்பங்கள் நீங்கி, குறைவில்லா செல்வத்தோடு பேரின்ப மோக்ஷம் கிடைத்திடுமே
"ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி, தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்" என்று மந்திரம் சொல்லி தியானித்து பணிந்திடுவோம்
ஸ்கந்தமாதா
பக்தி செய்த தேவர் துயர் தீர்த்திடவே பரமனை வேண்டிடச் செய்தவளே
சிவனின் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே
அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே
வீணரை வென்றிட சேயினைப் பணித்து வேலினைத் தந்திட்ட சக்தி துர்க்கையளே!
ஸ்கந்தமாதா வெனச் சிம்மத்திலமர்ந்து குமரனை ஆறுமுகனை மடியினில் கொண்டவளே
மேல் வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே
மற்றிரு கைகளில் மலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜத்தாளே
நவநாயகியரில் ஐந்தாம் நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்திடுவோம்
🪷🪷🪷


