ShareChat
click to see wallet page
search
#🔴இன்று உருவாகும் மோன்தா புயல்🌪️ மோந்தா புயலால் கனமழை எச்சரிக்கை: தமிழகம், ஆந்திராவில் உஷார் நிலை மோந்தா புயல் காரணமாக ஒடிசாவின் புரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று நேற்று ஒலிபெருக்கி மூலம் மீட்புப் படை வீரர்கள் அறிவுறுத்தினர். விஜயவாடா / புவனேஸ்வர்: மோந்தா புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகியவை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று தீவிர புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மோந்தா என்று பெயரிடப்பட்டு உள்ளது. நாளை மாலை அல்லது இரவில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.