ShareChat
click to see wallet page
search
#காளி காளி வழிபாடு பற்றி ஒரு செவி வழி செய்தி உண்டு. ஒரு காலத்தில் காளி கோயில் என்றாலே மந்திரவாதிகளின் புகலிடம் என்ற எண்ணம் இருந்தது. எனவே இந்த கோயில்களின் பக்கமே பலரும் செல்வதில்லை. மகாகாளியின் உருவமும் பயமுறுத்துவதாக இருந்தது. இவள் பராசக்தியின் அவதாரமாக கண்ணனுக்கு முன் பிறந்தவள். ஹம்ஸனை எச்சரித்தவள். கண்ணனிடம் அவள், "நாராயணா, நான் தெய்வமாய் இருந்தும் என்னை யாரும் வணங்குவதில்லையே! பயந்து ஓடுகிறார்களே! என்னை வழிபடும் காலம் எப்போது வரும்?" எனக் கேட்டாள். அதற்கு நாராயணன், "கலியுகத்தில் உன் வழிபாடு பெருகும். அப்போது மக்கள் பாவங்களை உச்சமாக செய்வார்கள். பூஜை புனஸ்காரங்கள் கூட பணத்துக்காக தான் நடக்கும். பணமுள்ளவனுக்கே கோயில் என்ற நிலைமை உருவாகும். உண்மையான பக்தி இருக்காது. பெண்கள் ஆண்களால் வேட்டையாடப்படுவார்கள். சில பெண்களும் ஆண்களை வேட்டையாடுவார்கள். ஒழுக்கமற்ற சூழல் உருவாகும். பெற்றவர்கள் பிள்ளைகளாலும், பிள்ளைகள் பெற்றோர்களாலும் வெறுக்கப்படுவார்கள். கொலை, கொள்ளை என உலகமே அல்லோ கோலப்படும். அப்போது மனிதனுக்கு பாதுகாப்பு தேவைப்படும். அவன் தைரியம் நிறைந்தவனாக பிறர் முன் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் பயந்து கொண்டே வாழ்வான். அப்போது பயங்கரமான வடிவுடைய உன்னை வணங்கி தன்னை பாதுகாக்கும் படி கேட்பான். உனக்கு பூஜை புனஸ்காரங்கள் அதிகமாகும்" என்றார். இப்போது அப்படித்தானே நடக்கிறது! மிக மிக உயரமான பிரத்தியங்கிரா, காளி சிலைகள் எங்கும் அமைக்கப்படுகின்றன. மனிதனும் வணங்குகிறான். ... #🙏ஆன்மீகம் #🙏கோவில் #Brahmin_Political_Party #SaiSudhaDevaTrust
காளி - காளிவழிபாடு சுவாரஸ்யதகவல் காளிவழிபாடு சுவாரஸ்யதகவல் - ShareChat